Published : 02 Apr 2019 03:28 PM
Last Updated : 02 Apr 2019 03:28 PM

தேமுதிகவை எவ்வளவு அசிங்கப்படுத்தினார்? தெய்வம் இருக்கிறது: துரைமுருகன் மீது பிரேமலதா விமர்சனம்

துரைமுருகன் கொள்ளையடித்த பணம் மொத்தமாக வெளியே வந்துகொண்டிருக்கிறது என, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வருமான வரி சோதனை நடைபெற்றது. இதையடுத்து, அவரது மகனும் வேலூர் தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி, திமுக நிர்வாகிகள் இல்லங்களிலும் சோதனை நடைபெற்றது. மேலும், காட்பாடியில் திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் இன்று (செவ்வாய்க்கிழமை) தேர்தல் பரப்புரையில் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், "15 நாட்களுக்கு முன்பு துரைமுருகன் தேமுதிகவை எவ்வளவு அசிங்கப்படுத்தினார் என்பது இந்த உலகத்திற்கே தெரியும். ஆனால், இன்றைக்கு என்ன நடந்தது? தெய்வம் இருக்கிறது.

இன்றைக்கு மூட்டை மூட்டையாக கோடி கோடியாக கொள்ளையடித்து சம்பாதித்த பணம், பாதாளத்தில் இருந்து இன்னும் தோண்டி எடுத்துக்கொண்டே இருக்கிறார்களாம். 500 கோடி, 1,000 கோடி ரூபாய் என்கிறார்கள். கொள்ளையடித்த பணம் எல்லாம் இன்றைக்கு மொத்தமாக வெளியே வந்துகொண்டிருக்கிறது. துரைமுருகன் 'யோக்கியர்', உத்தமர் போன்று பேசிக் கொண்டிருந்தார். இன்றைக்கு என்ன ஆனது?"

இவ்வாறு பிரேமலதா பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x