Published : 10 Apr 2019 08:09 AM
Last Updated : 10 Apr 2019 08:09 AM
தமிழகம் முழுவதும் கோடைகாலங் களில் மாம்பழம் விற்பனை அமோகமாக நடைபெறும். அந்த காலகட்டத்தில் இயற்கையாக மாம்பழம் பழுப்பதற்கு முன்பே, கார்பைடு கல் (ரசாயன கல்) வைத்து மாம்பழம் பழுக்க வைக்கப்படுவது ஒவ்வொரு ஆண்டும் நிகழ்கிறது. இவற்றை உட்கொள்ளும்போது வயிற்று உபாதைகள், நரம்பு மண்டல பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
எனவே, ரசாயனக் கல் மூலம் பழுக்க வைக்கப்படும் மாம்பழங் களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆண்டுதோறும் பறி முதல் செய்து வருகின்றனர்.
இருப்பினும், இதை முழுமை யாகத் தடுக்க முடியவில்லை. இந்த பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகை யில், எத்திலின் வாயு மூலம் மாம் பழங்களைப் பழுக்க வைக்க வியா பாரிகளுக்கு உணவு பாதுகாப்பு துறை தற்போது அனுமதி வழங்கி யுள்ளது.
இதனை மீறி, ரசாயனக் கல் பயன் படுத்தி பழுக்க வைத்தால் பழங் களை பறிமுதல் செய்வது மட்டு மின்றி, கிரிமினல் வழக்குகளும் பதிவு செய்யப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக, உணவு பாதுகாப்புத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
எத்திலின் வாயு மூலம் பழங் களைப் பழுக்க வைக்கலாம் என்று உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையமே அனுமதி வழங்கி யுள்ளது. சில வியாபாரிகள் ஏற் கெனவே இம்முறையைப் பயன் படுத்தி வருகின்றனர்.
இருப்பினும், தமிழகம் முழுவ தும் பெரிய அளவில் இந்த ஆண்டு தான் மேற்கொள்ள உள்ளோம். பழம் முழுவதும் மஞ்சள் நிறமாக இருந்தால் ரசாயன கல் பயன்படுத்தி இருக்கும் வாய்ப்பு அதிகம்.
அதுவே, பாதி மஞ்சள், மீதி பச்சையாக இருந்தால் ரசாயனக் கல் பயன்படுத்தி இருக்க வாய்ப்பு குறைவு. எத்திலின் வாயுவைப் பயன்படுத்தும்போது, இயற்கை யான முறையில் பழம் பழுப்பதைப் போன்ற நிகழ்வுதான் ஏற்படும். ரசா யனக் கல்லைப் பயன்படுத்துவோர் மீது காவல்துறை உதவியுடன் கிரி மினல் வழக்கு பதிவு செய்து நட வடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT