Published : 12 Apr 2019 12:00 AM
Last Updated : 12 Apr 2019 12:00 AM
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி தேர்தல் களத்தில், கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் செயல்பாடு மந்தகதியில் இருப்பதாக, இத்தொகுதி திமுக வேட்பாளர் ஞானதிரவியம், கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினிடம் முறையிட்டுள்ளார்.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் கடந்த 1951-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் அதிமுக 7 முறையும், காங்கிரஸ் கட்சி 5 முறையும், திமுக 2 முறையும், சுதந்திரா கட்சி ஒருமுறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முறையும் வெற்றிபெற்றுள்ளன. இத்தொகுதியில் கடந்த முறை திமுக சார்பில் போட்டியிட்ட சி.தேவதாசசுந்தரம் 2,72,040 வாக்கு களுடன் 2-ம் இடம் பெற்றிருந்தார்.
தற்போது, திருநெல்வேலி தொகுதியில் திமுக வேட்பாளராக ஞானதிரவியம் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக கடந்த 9-ம் தேதி பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். பின்னர், பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் வேட்பாளருடன் சென்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அன்று மாலையில் சங்கரன்கோவிலில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் தென்காசி தொகுதி திமுக வேட்பாளர் தனுஷ்குமாரை ஆதரித்து பேசினார்.
ஸ்டாலின் தாழையூத்தில் தங்கியிருந்தபோது, அவரை, திருநெல்வேலி தொகுதி திமுக வேட்பாளர் ஞானதிரவியம் மற்றும் இத்தொகுதி திமுக பொறுப்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் சந்தித்தனர். `அதிமுகவுடன் ஒப்பிடுகையில் திருநெல்வேலி தொகுதியில் திமுகவின் தேர்தல் பணி மந்தகதியில் இருப்பதாகவும், முக்கிய நிர்வாகிகள் சிலர் சுறுசுறுப்பு காட்டாமல் வெறுமனே இருப்பதாகவும்’ மு.க.ஸ்டாலினிடம் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
திருநெல்வேலியில் மத்திய மாவட்ட செயலாளர் அப்துல்வகாப் தலைமையில் ஓரணியாகவும், பாளையங்கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டி.பி.எம்.மைதீன்கான் தலைமை யில் மற்றொரு அணியாகவும் பிரிந்து வாக்குசேகரிப்பு நடைபெறும் விவகாரமும் ஸ்டாலின் காதுகளுக்கு சென்றுள்ளது. ஆனாலும், கட்சி தலைமையிலிருந்து முக்கிய நிர்வாகிகளுக்கு உரிய உத்தரவுகள் வரவில்லை என்று திமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது.
கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட தேவதாசசுந்தரம் தோல்வியுற்றதற்கு கட்சிக்குள் ளேயே நடைபெற்ற உள்ளடி வேலைகள் காரணமாக இருந்த தையும், தற்போதும் திமுக முக்கிய நிர்வாகிகள் ஒன்றுபட்டு தேர்தல் களப்பணியில் ஈடுபடாமல் இருப்பதாகவும், தலைமையிடம் வேட்பாளர் ஞானதிரவியம் தெரிவித்திருப்பதாக கட்சி விசுவாசிகள் கூறுகிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT