Last Updated : 14 Apr, 2019 12:00 AM

 

Published : 14 Apr 2019 12:00 AM
Last Updated : 14 Apr 2019 12:00 AM

அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த புதிய முயற்சி; சலிப்படைந்த வாக்காளர்களை கவரும் மக்கள் நீதி மய்யம்

பிரதான கட்சிகளின் பிரச்சாரங் களுக்கு மத்தியில் முற்றிலும் மாறுபட்ட நிலையில் மக்கள் நீதி மய்யம் களப்பணி ஆற்றி வருகி றது. அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தவும், ‘சலிப்பு நிலையில்’ உள்ள வாக்காளர்களை தங்கள் பக்கம் ஈர்க்கவும் பல்வேறு வியூகங்களை வகுத்து பிரச்சாரம் செய்கின்றனர்.

தேனி தொகுதியில் பிரதான கட்சிகளின் பிரச்சாரத்தினால் தேர்தல் களம் உச்சநிலையில் உள்ளது. இந்நிலையில் தேர்தலுக் கான ஆரவாரம் இன்றி மக்கள் நீதி மய்யம் ஆங்காங்கே பிரச்சா ரத்தில் ஈடுபட்டு வருகிறது. அரசியல் மாற்றம் என்பதை வலியுறுத்தி இவர்கள் களப்பணி ஆற்றுகின்றனர். இது குறித்து இக்கட்சியினர் கூறியதாவது:தேர்தலுக்காகப் பல கோடி ரூபாய்களை அதிமுக, திமுக செலவழிக்கின்றன. பணம், அதிகார பலத்தினால் வாக்காளர்களின் மனநிலையை மாற்ற வேண்டும் என்ற துடிப்பு அவர்களிடம் உள்ளது. வளர்ச்சித் திட்டங்கள் மூலம் சுயமாகவே பொருளீட்டும் தன்மையை வளர்த்துக் கொள்வதுதான் உண்மையான முன்னேற்றம். ஆனால் மக்களை கடைசி வரை கையேந்த வைக்கும் நிலையையே கட்சிகள் உருவாக்கிக் கொண்டிருக் கின்றன.

அதே சமயம் மக்கள் நீதி மய்யம் சார்பில் மாற்றத்துக்கு வாய்ப்புத் தாருங்கள். ஊழலற்ற ஆட்சியையும், வளமான தமிழகத்தையும் உருவாக்குவோம் என்று பிரச்சாரம் செய்கிறோம். இது மக்களிடம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றனர்.

இதற்காக தொகுதி பொறுப் பாளர், இரண்டு சட்டப் பேரவைத் தொகுதிக்கு ஒரு பிரதிநிதி, தொகுதிச் செயலாளர், பகுதிச் செயலாளர், களப் பணியாளர்கள் என்று மக்களை நேரடியாகச் சந்தித்து ஆதரவை திரட்டும் வகையில் உட்கட்டமைப்புகளை உருவாக்கி உள்ளனர். இது குறித்து தேனி தொகுதி வேட்பாளர் ராதாகிருஷ்ணன் கூறியதா வது:

மதுரை-போடி அகல ரயில் பாதை திட்டமே ரூ.400 கோடியில் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் இங்குள்ள கட்சிகள் இந்த அளவுக்குப் பணத்தை தேர்தலுக் காக மட்டும் செலவழிக்கின்றன. உழைத்து இவ்வளவு பணத் தை சேர்க்க முடியாது. முறைகே டான பணத்தைத்தான் வாரி இறைக் கின்றனர். இவர்கள் பல்வேறு விதிமீறல்களிலும் ஈடுபடுகின்றனர். மாற்றத்தை உருவாக்க நாங்கள் களம் இறங்கி இருக்கிறோம். இதனால் பிரதான கட்சிகள் போல எங்கள் பிரச்சாரம் ஆரவாரமாக இருக்காது. மக்களுக்குச் சேவை செய்யும் நோக்கில் எங்கள் செயல்பாடு அமைந்துள்ளது. தற்போது அரசியல் மீது பொதுமக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட கட்சிகளுக்கே ஓட்டு போடும் நிலை உள்ளதே என்ற ஆதங்கம் அவர்களிடம் உள்ளது. எனவே கண்டிப்பாக அவர்களின் கவனம் எங்கள் பக்கம் திரும்பும் என்றார்.

இருப்பினும் தேர்தல் என்றாலே பணப்புழக்கம், தொண்டர்களின் கூட்டம், ஆரவாரம் என்று இங்கு கட்டமைக்கப்பட்டுள்ளன. இதில் இருந்து பொதுமக்கள் எளிதில் விடுபடுவார்களா, மாற்று அரசி யலுக்கான மூன்றாவது அணிகளை உருவாக்கு வதற்கான விதைகளை வேரூன்ற விடுவார்களா என்பது தேர்தலுக்குப் பிறகே தெரிய வரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x