Published : 05 Apr 2019 04:52 PM
Last Updated : 05 Apr 2019 04:52 PM
அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அன்புமணி பேசிய வீடியோ இணையத்தில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இதனைப் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
மக்களவைத் தேர்தலில் அதிமுக கட்சியோடு கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கிறது பாமக. இந்தக் கூட்டணி முடிவாகி, அறிவிக்கப்பட்டதிலிருந்தே தொடர்ச்சியாக சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்பட்டு வருகிறார் அன்புமணி ராமதாஸ். அவரது பழைய பேச்சுகள் அடங்கிய வீடியோவை ஷேர் செய்து கிண்டல் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், திருப்போரூரில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்த போது அன்புமணி ராமதாஸ் பேசினார். இதுவும் இணையத்தில் பெரும் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.
தன்னுடைய பேச்சில், "'இங்கு நமது கூட்டணி ஆட்கள்தான் அதிகம். எதிரணியில் உள்ள திமுகவுக்கு கொஞ்சம் ஓட்டு உள்ளது. கூட்டணியினர் கொஞ்சம் இருக்கிறார்கள்.
கூட்டணிக் கட்சியினருக்கு ஒரு செல்வாக்கும் இல்லை. தேர்தல் அன்று என்ன நடக்கும்?, பூத்தில் என்ன நடக்கும்?. நாம் தான் இருப்போம் பூத்தில். நம் ஆட்கள் மட்டும்தான் இருப்பார்கள். என்ன புரிகிறதா? அப்புறம் என்ன சொல்ல வேண்டுமா வெளியில்'' என்று பேசியுள்ளார் அன்புமணி ராமதாஸ்
இந்தப் பேச்சு அடங்கிய 0:23 விநாடிகள் கொண்ட வீடியோ பதிவு ட்விட்டரில் பகிரப்பட்டது. இது பலராலும் பகிரப்பட்டு வருகிறது. நெட்டிசன்கள் வசைபாடியும், கிண்டல் செய்தும் தங்கள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
இதனால் இந்த வீடியோ பதிவு சென்னை அளவில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த வீடியோவைப் பகிர்ந்து சிலர் வெளியிட்டுள்ள கருத்துகள் உங்கள் பார்வைக்கு:
@sellaponu: கள்ள ஓட்டு போடுவது பற்றி வெளிப்படையாக பேசிய அன்புமணி பொதுமக்கள் தேர்தல் ஆணையம் அதிர்ச்சி. தேர்தலில் தில்லுமுல்லு பற்றி வாக்குமூலம்
@nithya_shre: "பூத்ல நம்மதான் இருப்போம்.... நம்மதான் இருப்போம்... என்ன புரியுதா..." - அன்புமணி. ஆனா ஒண்ணு மட்டும் நல்லா புரியுது... மக்கள்கிட்ட நேர்மையா ஓட்டு வாங்கி ஜெயிக்க உங்களால் முடியவில்லைனு.
@HAJAMYDEENNKS: பூத்ல நாம தான் இருப்போம்.. நாம தான் இருப்போம் - அன்புமணி #இப்படிதான் போனதடவை தருமபுரியில ஜெயிச்சாரு ..அனுபவம் !
@BabuVMK: பூத்ல நாம தான் இருப்போம்.. நாம தான் இருப்போம் - சூசகமாக வெற்றியை அறிவித்த அன்புமணி ராமதாஸ்
அதாவது பூத்களைக் கைப்பற்றி வாக்குகளைப் பதிவு செய்யப்போறோம் என்பதைத்தான் மறைமுகமாகச் சொல்கிறார். மக்கள் ஓட்டு போடமாட்டாங்கன்னு தெரிஞ்சிடுச்சு. அதான் அடுத்த திட்டத்தை கையில் எடுக்கிறாங்க.
@EVenkat5: "பூத்ல நம்மதான் இருப்போம்.... நம்மதான் இருப்போம்.... புரிஞ்சுதில்ல... அவ்ளோதான் முடிஞ்சு போச்சு....!"
பிரச்சார மேடையிலேயே வெற்றியை உறுதி செய்த #மருத்துவர் அன்புமணி ராமதாஸ்...!
தேர்தல் ஆணையம் இதையெல்லாம் கவனித்து நடவடிக்கை எடுக்குமா என்பதே வாக்காளப் பெரு மக்களின் கேள்வி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT