Published : 05 Apr 2019 11:30 AM
Last Updated : 05 Apr 2019 11:30 AM
காங்கிரஸ், பாஜக நேரடியாக மோதுவதால் சிவகங்கை, கன்னியாகுமரி ஆகிய மக்களவைத் தொகுதிகள் தேசிய அரசியல் களமாக மாறியுள்ளன. இதனால் உள்ளூர் அரசியலைவிட தேசிய அரசியலுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் காங்கிரஸ், பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், இந்திய முஸ்லிம் லீக் ஆகிய தேசிய கட்சிகள் போட்டியிடுகின்றன. இதில் திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, சிவகங்கை ஆகிய 9 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.
அதேபோல் சிவகங்கை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், கோவை, தூத்துக்குடி ஆகிய 5 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது.
கோவையில் பாஜக, மார்க்சிஸ்ட் கட்சிகள் மோதுகின்றன. ராமநாதபுரத்தில் பாஜக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் மோதுகின்றன. சிவகங்கை, கன்னியாகுமரி தொகுதிகளில் காங்கிரஸ், பாஜக நேரடியாக மோதுகி ன்றன. இரு கட்சிகளும் ஆட்சியைக் கைப்பற்ற நினைக்கும் கட்சிகள் என்பதால் பிரச்சாரம் சூடுபிடித் துள்ளன.
சிவகங்கையில் காங்கிரஸில் ப.சிதம் பரம் மகன் கார்த்தி சிதம்பரமும், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவும், கன்னியாகுமரியில் பாஜக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், காங்கிஸ் மூத்த தலைவர் வசந்தகுமாரும் போட்டியிடுகின்றனர். இதனால் தேசிய அரசியலுக்கு பஞ்சமில்லாத இடமாக சிவகங் கையும், கன்னியாகுமாரியும் மாறியுள்ளன.
இங்கே மத்திய அரசு திட்டங்கள் குறித்து பாஜகவும், மத்திய அரசின் செயல்பாடுகளை விமர்சித்து காங்கிரசும் பேசி வருகின்றன. இங்கு வரும் அரசியல் கட்சித் தலைவர்களும் மோடி, ராகுல் குறித்தே அதிகம் பேசுகின்றனர். இதனால் உள்ளூர் அரசியல் எடுபடவில்லை.
பொருளாதாரம், சிபிஐ, அமலாக்கத் துறை, மத்திய ரிசர்வ் வங்கி, நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சாரங்களே பிரதா னமாக உள்ளன.
இது குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், சிவகங்கை, கன்னியாகுமரி தொகுதிக ளில் மத்தியில் ஆளுகின்ற, ஆட்சி செய்த கட்சிகள் மோதுகின்றன. இது மத்திய அரசுக்கான தேர்தல் என்பதால் பொதுவாக தேசிய அரசியலே பிரச்சாரத்தில் எடுபடும். அதுவும் இந்த இரு தொகுதிகளிலும் முக்கிய தலைவர்கள் மோதுவதால் தேசிய அரசியல் அனல் பறக்கத் தான் செய்யும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT