Published : 16 Apr 2019 12:00 AM
Last Updated : 16 Apr 2019 12:00 AM
திண்டுக்கல் கோட்டையைக் கைப்பற்றுவதில் திமுக, பாமக, அமமுக கட்சி களிடையே கடும் போட்டி நிலவுகிறது. திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் ஜோதி முத்து போட்டியிடுகிறார். வேட்புமனுத் தாக்கலுக்குப் பின் பிரச்சாரத்தில் இருந்த வேகம் பின்னர் இல்லாமல்போனது.
அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதன் ஆகியோர் ஆரம்பத்தில் பாமக வேட்பாளருக்குப் பிரச்சாரம் செய் வதில் வேகம் காட்டினர். இறுதியில் நிலக்கோட்டை இடைத்தேர்தலில் போட் டியிடும் அதிமுக வேட்பாளர் தேன்மொழி பிரச்சாரத்தில் அதிகக் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டனர்.
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி பிரச்சாரத்துக்கு வருவார் என்ற அக்கட்சியினரின் எதிர்பார்ப்பு கடைசி வரை நிறைவேறவில்லை. திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளிலும் 2016 தேர்தலில் பாமக தனித்தே போட்டியிட்டது. இதில் பாமக வாங்கிய மொத்த வாக்குகள் 7099 மட்டுமே.
இக்கட்சிக்கு சட்டசபைத் தேர்தலில் வாக்களித்த வன்னிய கிறிஸ்தவர்களின் ஆதரவு தற்போதும் கிடைக்குமா என்ற சந்தேகம் அந்தக் கட்சியினரிடையே எழுந்துள்ளது. இதனால், முழுக்க முழுக்க அதிமுக வாக்குகளையே பாமக நம்பியுள்ளது. பாமக வாக்குகள், அதிமுக வாக்குகள் பிரிந்து செல்லாத வகையில் தக்கவைக்க கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
திமுக வேட்பாளர் வேலுச்சாமிக்கு அக்கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் இ.பெரியசாமி, கொறடா அர.சக்கரபாணி, எம்எல்ஏக்கள் செந்தில் குமார், ஆண்டி அம்பலம் ஆகியோர் ஆரம்பம் முதல் தொகுதியில் வேட்பாளருடன் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக் குட்பட்ட 6 தொகுதிகளில் 4 திமுக வசம் உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோதே திமுகவுக்கு வாக்களித்த மக்கள், இந்த முறையும் தங்களுக்கே வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையில் திமுகவினர் உள்ளனர். பிரச்சார பலம், கட்சி வாக்குகள் ஆகியவை திமுக வேட்பாளருக்கு கை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினரிடையே உள்ளது.
அமமுக வேட்பாளர் ஜோதிமுருகனுக்கு தொகுதி முழுவதும் கட்சியின் அமைப்புகள் பரவலாக இருப்பதால் கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணியில் ஒத்துழைக்கின்றனர். அதிமுக வாக்கு வங்கியைப் பிரிப்பதில் குறியாக உள்ளார். தொகுதியில் அதிமுக நேரடியாகப் போட்டியிடாமல் பாமகவுக்கு ஒதுக்கியது தங்களுக்குச் சாதகம் என்று நினைக்கின்றனர் அமமுகவினர். வேட்பாளர் ஜோதிமுருகன், தான் சார்ந்த சமுதாய வாக்குகள் மற்றும் அதிமுக வாக்குகளை தங்கள் பக்கம் திருப்ப தீவிரப் பணியாற்றி வருகிறார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் தனது பிரச்சாரத்தின் மூலம் மக்களைக் கவர்ந்து வருகிறார். தொகுதியில் அவரின் எளிமையான பிரச்சாரம், கிராம மக்களைக் கவரும் வகையில் இருப்பதால் அதை வாக்குகளாக மாற்ற முயற்சிக்கிறார். சிறுபான்மையினர் வாக்குகள் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங் கிணைப்பாளர் சீமானின் பேச்சால் கவரப்பட்டுள்ள புதிய வாக்காளர்களில் ஒரு பகுதியினர் இவருக்கு வாக்களிக்க வாய்ப்புள்ளது.
வாக்குகளை அதிகம் பெற கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறார். மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் டாக்டர் சுதாகரன் போட்டியிடுகிறார். தேர்தலுக்குப் புதுக்கட்சி என்பதால் தொடக்கத்தில் பிரச்சாரத்துக்கு அனுமதி வாங்குவதிலேயே அவர்கள் திணறிப் போயினர். தேர்தல் ஆணையம் நிர்ணயித்த தொகையைக்காட்டிலும் குறைந்த செல விலேயே தனது பிரச்சாரத்தை முடிக் கும் நிலையில் உள்ளார். நடிகர் கமல்ஹாசன் திண்டுக்கல்லில் பிரச்சாரம் செய்தது இவ ருக்குப் பலம்.
தொகுதியில் ஒன்றியம், கிளைகள் வாரியாக நிர்வாகிகள் இல்லாதது இவருக்கு பலவீனமாகும். புதிய வாக்காளர்களில் ஒரு பகுதியினர் இவருக்கு வாக்களிக்க வாய்ப்புள்ளது.
திண்டுக்கல் கோட்டையைப் பிடிப்பது யார் என்பதில் முக்கியக் கட்சிகளான திமுக, பாமக, அமமுக கட்சிகளிடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT