Last Updated : 12 Apr, 2019 12:00 AM

 

Published : 12 Apr 2019 12:00 AM
Last Updated : 12 Apr 2019 12:00 AM

அமமுகவுக்கு செல்ல விடாமல் தடுத்து சிறுபான்மையினர் வாக்குகளை கவர காங்கிரஸ் தீவிர முயற்சி

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் சிறுபான்மையினர் வாக்கு களைப் பெற காங்கிரஸ் நிர்வாகிகள் தீவிர முயற்சி எடுத்து வரு கின்றனர்.

பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்ததால் முஸ்லிம், கிறிஸ்தவர் போன்ற சிறுபான்மையினர் ஆதரவு தங்களுக்கு முழுமையாக கிடைக்கும் என திமுக- காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் நினைத்திருந்தனர்.

இந்நிலையில், பாஜகவை அமமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கடுமையாக விமர்சித்து வருகிறார். அவருடன் கூட்டணி வைத்துள்ள எஸ்டிபிஐ கட்சியினர், முஸ்லிம் வாக்குகளை அமமுக வேட்பாளர்களுக்கு பெற்றுத் தர முயற்சித்து வருகின்றனர். மேலும், கிறிஸ்தவ அமைப்புகளையும் அமமுகவினர் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இதுபோன்று சிறுபான்மையினர் வாக்குகள் சிதறினால் தங்களின் வெற்றி வாய்ப்பு பாதிக்கும் என காங்கிரஸ் கட்சியினர் கருதுகின்றனர். எனவே, சிவகங்கை மக்களவைத் தொகுதியில் சிறுபான்மையினர் வாக்குகள் அமமுகவுக்குச் செல்வதைத் தடுக்க காங்கிரஸ் நிர்வாகிகள் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.

முஸ்லிம், கிறிஸ்தவ தலைவர்களை சந்தித்து "அமமுகவுக்கு வாக்களக்க வேண்டாம். சிறுபான்மையினரின் மொத்த வாக்குகளும் சிந்தாமல் சிதறாமல் காங்கிரஸ் வேட்பாளருக்கு கிடைக்கும் வகையில் வாக்களிக்க வேண்டும்" என்று அக்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். அதேபோல் சிறுபான்மையினர் அதிக அளவில் வசிக்கும் கிராமங்களுக்குச் சென்று முக்கியப் பிரமுகர்களை சந்தித்து காங்கிரஸ் கட்சியினர் ஆதரவு திரட்டி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x