Published : 10 Apr 2019 12:00 AM
Last Updated : 10 Apr 2019 12:00 AM
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பாஜக, முஸ்லிம் லீக், அமமுக கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. தற்போது சேர்க்கப்பட்டுள்ள 1,42,169 புதிய வாக்காளர்கள் வேட்பாளரின் வெற்றியைத் தீர்மானிக்கும் நிலையில் உள்ளனர்.
1952-ம் ஆண்டு முதல் இதுவரையிலும் ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் நடைபெற்றுள்ள தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரஸ் 6 முறையும், அதிமுக 4 முறையும், திமுக 3 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் 1 முறையும், பார்வார்டு பிளாக் 1 முறையும், சுயேச்சை 1 முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் ராமநாதபுரம், முதுகுளத்தூர், திருவாடானை, பரமக்குடி(தனி), புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 15,59,749 வாக்காளர்கள் உள்ளனர். 2014-ல் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 14,17,580.
ராமநாதபுரத்தில் அங்கீகரிக் கப்பட்ட அரசியல் கட்சிகளின் சார்பில் 7 வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 23 பேர் களத்தில் உள்ளனர். எனினும் பாஜக, முஸ்லிம் லீக், அமமுக இடையில்தான் போட்டி நிலவுகிறது.
முக்குலத்தோர் பெரும் பான்மையாக வசிக்கும் ராமநாதபுரத்தில் பாஜகவும், அமமுகவும் முக்குலத்தோரையே களமிறக்கி உள்ளன. ராமநாத புரத்தைப் பொறுத்தவரை முக் குலத்தோர் பெரும்பாலானோர் திராவிடக் கட்சிகளில் ஐக்கியமாகிக் கிடப்பதால் இங்கு முக்குலத்தோர் மத்தியில் பாஜகவுக்கு செல்வாக்கு குறைவு. இதனால் கணிசமான முக் குலத்தோர் வாக்குகளை அமமுக வேட்பாளர் வது.ந ஆனந்த் பிரிக்க லாம். ராமநாதபுரம் தொகுதியில் தனது கட்சியின் தொண்டர்கள் பலம் இல்லாததால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி பண பலம் மற்றும் திமுகவினரையும், மனிதநேய மக்கள் கட்சியையும் நம்பியே களம் இறங்கி உள்ளார்.
கடந்த தேர்தலில் அதிமுகவுடன் இல்லாத பாமக, தேமுதிக கட்சிகள் இப்போது பாஜக அணியில் இருப்பது கூடுதல் பலம். அதேசமயம், அதிமுக-வை விட குறைவான வாக்கு வங்கியைக் கொண்ட திமுக கூட்டணிக்கு சிறுபான்மையினர் கைகொடுக்கிறார்கள்.
இந் நிலையில் ராமநாதபுரம் தொகுதியில் புதிய வாக்காளர்கள் 1,42,169 பேர் உள்ளனர். கடந்த முறை பதிவான கட்சி வாக்குகளுடன், புதிய வாக்காளர்களின் வாக்கு கள் குறிப்பிட்ட சதவீதம் பெற்றாலே வேட்பாளரின் வெற்றி உறுதிப்படுத்தப்படும். இதைக் கருத்தில் கொண்டே புதிய வாக்காளர்கள் மட்டுமின்றி, அவர்களில் முதல் முறையாக வாக்களிக்கும் இளம் வாக் காளர்களின் வாக்குகளைப் பெற பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT