Published : 10 Apr 2019 12:00 AM
Last Updated : 10 Apr 2019 12:00 AM
சென்னை அடுத்த அனகாபுத் தூரில் பருத்தி, பட்டு நூலு டன், வாழை நார் சேர்த்து தயாரிக்கப்படும் காட்டன், பட்டுச் சேலைகளுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு அதி கரித்து வரும் நிலையில், அரசு தரப்பில் உரிய ஒத்துழைப்பு இல்லாததால் இதை பெரிய தொழிலாக செய்ய முடியவில்லை என்று நெசவாளர்கள் வேதனை தெரி விக்கின்றனர். இத்தொழிலை காப்பாற்றுவதாக வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கே வாக் களிப்போம் என்று உறுதிபட தெரிவிக்கின்றனர்.
பட்டுச் சேலைக்கு உலகப் புகழ்பெற்றது காஞ்சிபுரம். இந்த மாவட்டத்தில் உள்ள அனகாபுத்தூர் நகராட்சி, பாரம்பரியமிக்க கைத்தறி நெசவுக்கு பெயர் பெற்ற நகரமாகும். இங்கு 1,000-க்கும் மேற்பட்ட நெசவாளர் குடும்பங்கள் உள்ளன. ஆனால், சமீபகாலமாக கைத்தறித் தொழில் நசிந்து வருவதால் 5 ஆயிரம் தறிகள் இருந்த இடத்தில் இப்போது 300 தறிகள்தான் இருக்கின்றன.
இந்நிலையில், இங்கு உள்ள கைத்தறிக் குழுமம் ஒன்று பருத்தி நூல் மற்றும் பட்டு நூலுடன், வாழை நார் சேர்த்து காட்டன் சேலை மற்றும் பட்டுச் சேலை நெசவு செய்து விற்கிறது. வெறுமனே பருத்தி நூலில் செய்யப்படும் காட்டன் சேலையைவிட, பருத்தி நூலுடன் வாழை நார் சேர்த்து தயாரிக்கப்படும் காட்டன் சேலை உடலுக்கு அதிக குளிர்ச்சி தருவதாக அதைப் பயன்படுத்துபவர்கள் கூறுகின்றனர்.
பருத்தி நூலுடன் 10 முதல் 50 சதவீதம் வாழை நார் கலந்து செய்யப்படும் காட்டன் சேலை ரூ.2,000 முதல் ரூ.7,500 வரை விற்கப்படுகிறது. பட்டு நூலில் 15 முதல் 50 சதவீதம் வரை வாழை நார் கலந்த பட்டுச் சேலை ரூ.3,500 முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.
இந்த சேலைகளுக்கு இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் அதிக வரவேற்பு உள்ளது. இருப் பினும் மத்திய, மாநில அரசு களின் உதவி இல்லாததால் பெரிய தொழிலாகச் செய்ய முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அனகாபுத்தூர் இயற்கை நார் நெசவுக் குழுமத் தலைவர் சி.சேகர் கூறியதாவது:மத்திய அரசு இழைக் கொள்கையை (Fibre Policy) ஏற்கெனவே அறிவித்துள்ளது. அதில், கேரளாவில் கயிறு, ஆந்திராவில் புளிச்சகீரைத் தண்டு நார், தமிழகத்தில் வாழை நார் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இதற்காக ரூ.350 கோடியும் ஒதுக்கப்பட் டுள்ளது. ஆனால், இக்கொள் கையை நடைமுறைப்படுத்த முக்கியத்துவம் தரப்பட வில்லை. வாழை சாகுபடியில் நாட்டி லேயே 2-வது இடத்தில் தமிழகம் உள்ளது. ஆனால், இங்கு ஏராளமான வாழை நார்கள் வீணாகின்றன. அதை முறையாக பயன் படுத்தினால் நன்கு லாபம் பெறலாம்.
பருத்தி நூலுடன் வாழை நார் சேர்த்து ஒரு சேலையை தயாரிக்க 5 பேர், 15 நாட்கள் தேவை. சுற்றுச்சூழலுக்கு உகந்த, உடலுக்கு அதிக குளிர்ச்சி தரும் வாழை நாரை மட்டும் பயன்படுத்தி சேலை உற்பத்தி செய்யும் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிய எங்கள் பகுதியில் ஆராய்ச்சிக் கூடம் அமைக்க வேண்டும். நவீனமுறையில் சேலை உற்பத்தி செய்ய மத்திய அரசு ரூ.1 கோடி முதல் ரூ.10 கோடி வரை சுமார் 90 சதவீதம் மானியம் தர தயாராக இருக்கிறது.
தேர்தல் புறக்கணிப்பு
இந்நிலையில், போதிய இடம் இல்லாததால் கைத் தறிகள் தொகுப்பு (Handloom Cluster) அமைக்க முடியாமல் சிரமப்படுகிறோம். சுமார் 1 ஏக்கர் நிலம் ஒதுக்கித் தருமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் 8 ஆண்டுகளாக கோரி வருகிறோம். இதுவரை வழங்கப்படவில்லை. இந்த குழுமத்தை அமைத்தால் நவீன முறையில் வாழை நார் சேலைகள் தயாரிக்கலாம். நெசவாளர்களுக்கு போதிய வருவாய் கிடைப்பதுடன், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். நசிந்து வரும் கைத்தறி நெசவுத் தொழிலைக் காப்பாற்றவும் முடியும்.
இதைக் கருத்தில் கொண்டு எங்களது கோரிக்கையை நிறைவேற்ற முன்வரும் கட்சிகளுக்கே நெசவாளர்கள் வாக்களிப்பார்கள். அவ்வாறு யாரும் வாக்குறுதி அளிக்கா விட்டால் தேர்தலைப் புறக் கணிக்க நெசவாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT