Published : 02 Apr 2019 12:00 AM
Last Updated : 02 Apr 2019 12:00 AM
தாங்கள் விரும்பிய ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி கிடைத்தும் திமுகவின் உச்சக்கட்ட கோஷ்டிப் பூசலால் தங்கள் வேட்பாளர் கரை சேருவாரா என கலக்கத்தில் உள்ளனர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 30 ஆண்டு களுக்குப் பின்னர் முன்னாள் அமைச்சர் சுப. தங்கவேலனின் குடும்பத்தைச் சேராத கமுதி க.முத்துராமலிங்கம் திமுகவின் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், அதன்பிறகு முன்னாள் அமைச்சர் சுப. தங்கவேலனின் ஆதரவாளர்களுக்கும், முத்துராமலிங்கத்தின் ஆதரவாளர்களுக்கும் கடந்த சில மாதங்களாக கோஷ்டிப் பூசல் இருந்தது. இதன் உச்சகட்டமாக, கடந்த டிசம்பரில் முதுகுளத்தூரில் நடந்த திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் திமுக துணை பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி முன்னிலை யிலேயே இரு தரப்பும் நாற்காலிகளை வீசித் தாக்கிக் கொண்டனர். இதனால் திமுக தலைமை இந்த கோஷ்டிப் பூசலைச் சமாளிக்க ராமநாதபுரம் மக்க ளவைத் தொகுதியை இந்தமுறை கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குக்கு ஒதுக்கியது.
ஆனால், நவாஸ்கனி பிரச்சாரத்துக்கு செல்லும்போது சுப.தங்கவேலன் தரப்பு அதை தவிர்த்து விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து முஸ்லிம் லீக் கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: கடந்த மக்களவைத் தேர்தலில் ராமநா தபுரத்தில் திமுக சார்பாக நிறுத்தப்பட்ட வேட்பாளர் முகம்மது ஜலீலுக்கு சுப. தங்கவே லன் மகன் தரப்பினர் சரியாக வேலை செய்யவில்லை. இதனால் அன்வர்ராஜா ஒண்ணே கால் லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் திமுக தோற்கக் கார ணமே, அவர்களுக்கு இடையே நடந்த கோஷ் டிப் பூசல்தான்.
கடந்த வெள்ளிக்கிழமை ராமநாதபுரம் மாவட்டத்தில் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம் திமுகவில் சுப. தங்கவேலன் தரப்பினர் தேர்தல் பிரச்சாரத்துக்கு சரியாக ஒத்துழைப்பு வழங்கவில்லை என முறை யிட்டோம். திமுகவின் கோஷ்டிப் பூசலை மீறி கரை சேர முடியுமா என்பதுதான் எங்கள் கவலை. ஆளுங்கட்சி வேட்பாளரை சமாளிப்பதை விட திமுக கோஷ்டிப் பூசலை சமாளிப்பதே பெரும் சவாலாக இருக்கிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT