Last Updated : 01 Apr, 2019 09:33 AM

 

Published : 01 Apr 2019 09:33 AM
Last Updated : 01 Apr 2019 09:33 AM

விருதுநகர் மக்களவை தொகுதியில் வாக்கு சேகரிக்க இளைஞர்களை களமிறக்கும் காங்கிரஸ்

புதிய வாக்காளர்கள் மற்றும் இளம் வாக்காளர்களைக் கவ ரும் வகையில் விருதுநகர் மக் களவைத் தொகுதியில் வாக்கு சேகரிக்க இளைஞர்களைக் களம் இறக்கியுள்ளது காங்கிரஸ் கட்சி.

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. விருதுநகர் மக்களவைத் தொகு திக்குட்பட்ட விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை, சிவகாசி, திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்குச் சேகரிக்க அதிக அளவில் இளைஞர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நக ரப் பகுதிகளில் மட்டுமின்றி தொகுதிக்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் வார்டு வாரியாக இளைஞர்கள், மாணவர் காங்கிரஸ் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு கிராமப்புறங் களில் குறிப்பாக பூத் அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் அந்தந்தப் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரிக்கின்றனர். குறிப்பாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து வீடு வீடாகச் சென்று விளக்க வேண் டும் என இவர்களுக்கு வகுப்பு எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கு இளைஞர் மற்றும் மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோ சனைக் கூட்டம் விருதுநகரில் நேற்று நடைபெற்றது. வேட்பாளர் மாணிக்கம் தாகூர் பேசியதாவது: கிராமப்புறங்களில் 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம், மாதம் ரூ.6 ஆயிரம் உதவித் தொகை, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, கல்விக் கடன், விவசாயக் கடன் ரத்து குறித்து வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.

ஒவ்வொரு குழுவும் ஒரு நாளைக்கு 10 முதல் 15 வீடு களுக்குச் சென்று வாக்காளர் களுக்கு விளக்கினாலே போது மானது. மாற்றமும் வளர்ச்சியும் உங்களிடம்தான் உள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x