Last Updated : 03 Apr, 2019 11:06 AM

 

Published : 03 Apr 2019 11:06 AM
Last Updated : 03 Apr 2019 11:06 AM

செலவுக்கு பணம் வழங்காததால் மதுரையில் தேர்தல் பணியில் சுணக்கம் காட்டும் காங்கிரஸ் ?

மதுரை மக்களவை தொகுதியில் தேர்தல் செலவுக்கு பணம் வழங்காததால்  காங்கிரஸ் கட்சியினர் சுணக்கம் காட்டுவதாக புகார் எழுகிறது. 

திமுக கூட்டணியில் மதுரை மக்களவை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒதுக்கப்பட்டுள்ளது. இக்கட்சி சார்பில், எழுத்தாளர் சு. வெங்கடேசன் நிறுத் தப்பட்டுள்ளார்.

இவரை எதிர்த்து, அதிமுக சார்பில், ராஜன்செல்லப்பாவின் மகன் ராஜ்சத்யன் களமிறங்கி உள்ளார். ஆளுங்கட்சி வேட்பாளரான இவரது தேர்தல் பிரசாரம் தொகுதிகளில் வார்டு வாரியாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கூட்டணி கட்சியினர் மூலம்  கூட்டம் சேர்க்கின்றனர்.

திமுக கூட்டணியிலும், ஊழியர் கூட்டம், பிரசாரம் என, பிரசாரம் சூடுபிடித்தாலும், இன்னும், அதிமுக இணையாக தேர்தல் பணியாற்ற கூட்டணி கட்சியினர் உற்சாகப்படுத்தவேண்டிய உள்ளது. 

கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியினர் ஆர்வம் காட்டாத சூழல் உள்ளது தெரிகிறது. அக்கட்சியில் தேர்தல் பணிபுரியும் நிர்வாகிகளுக்கு கட்சி மேலிடம் அல்லது கூட்டணியில் இருந்து தேர்தல் செலவினங்களுக்கு போதிய பணம் வழங்காததே காரணம் என, அக்கட்சி தரப்பில் தெரிவிக்கின்றனர்.

இது பற்றி காங்கிரஸ் கட்சியினர் கூறியது: கம்யூனிஸ்டு கட்சிகளை பொறுத்தவரையில் கொள்கை ரீதியாக அவர்கள் கூட்டணி கட்சியின ருக்கு பெரும்பாலும் பணம் தருவதில்லை.

வாங்குவதுமில்லை என்றாலும், கூட்டணிக்கு தலைமை ஏற்கும் கட்சியை தேர்தல் செலவினங்களை சமாளிக்கும். இது எழுதப்படாத உண்மை நிலை.  திமுக நிர்வாகிகள் இதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தொகுதி வாரியாக ஒவ்வொரு வார்டுக்கும் திமுகவில் இருந்து அக்கட்சியினருக்கு தலா ரூ.10 ஆயிரம் என, தேர்தல் செலவுக்கு வழங்கப்படுகிறது.

காங்கிரசை பொறுத்தவரை நாங்களும் முடிந்தவரை கையில் இருந்து செலவிடுகிறோம். தொகுதி வாரியாக பிரசார கூட்டங்களுக்கு கட்சியினர் மட்டுமின்றி பிறரை வர வழைக்கவேண்டும்.

டீ வாங்கி கொடுத்தல் உட்பட அடிப்படை செலவுக்கே பணமின்றி சுணக்கம் காட்டும்  நிலை உள்ளது. காங்கிரஸ் நிர்வாகிகள் கூடி ஆலோ சித் துள்ளோம். கூட்டணிக்கு தலையேற்கும் திமுக நிர்வாகிகள், வேட்பாளரிடம் இது பற்றி பேச இருக்கிறோம். 100 வார்டுகளிலும் வேட்பாளர் பிரசாரத்திற்கு வரும்போது, கூட்டணி கட்சியினருக் கென தேர்தல் செலவுக்கு தேவையான நிதியுதவி அளித்தால் மேலு ம் உற்சாகத்துடன் தேர்தல் பணியாற்றலாம், என்றனர்.  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x