Published : 13 Apr 2019 03:18 PM
Last Updated : 13 Apr 2019 03:18 PM
தேர்தல் ஆணையம் என்ன செய்து கொண்டிருக்கிறது என மேனகா காந்தியின் சர்ச்சைப் பேச்சு தொடர்பாக குஷ்பு காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அமைச்சர் மேனகா காந்தி சுல்தான்பூரில் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் முஸ்லிம் வாக்காளர்கள் பற்றி பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அதில் முஸ்லிம்கள் தனக்கு வாக்களிக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் கோரிக்கைகளைப் புறக்கணிக்க வேண்டியிருக்கும் என்ற தொனியில் பேசியிருப்பது சர்ச்சையாகியுள்ளது.
இந்தப் பேச்சை வைத்து காங்கிரஸ் கட்சியினர் பாஜகவை கடுமையாக சாடி வருகிறார்கள். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''இதுதான் எல்லை. பாஜக வெளிப்படையாக முஸ்லிம்களை அச்சுறுத்துகிறது. தேர்தல் ஆணையம் என்ன செய்து கொண்டிருக்கிறது? இது அதிகார துஷ்பிரயோகம் இல்லையா?
நீங்கள் ஏன் வெட்கமின்றி இதையெல்லாம் அனுமதிக்கிறீர்கள்? வளம், வளர்ச்சி, வேலைவாய்ப்பை வைத்து ஓட்டு கேட்க எப்படி மனசு வருகிறது? இன்னும் இவ்வளவும் தரம் குறைந்து போவீர்கள்? இந்தக் காணொலியும் போலி என்று சொல்லுங்கள்'' என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT