Published : 29 Apr 2019 12:00 AM
Last Updated : 29 Apr 2019 12:00 AM
குஜராத்தில் விதைகளுக்கு உரிமை கொண்டாடி பெப்சிகோ நிறுவனம் விவசாயிகள் மீது வழக்கு தொடர்ந்திருப்பது, இந்திய விவசாயிகளின் சுதேசி இறையாண்மைக்கு எதிரானது என தமிழக விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் லேஸ் சிப்ஸ் (LAYS CHIPS) தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் உரிமம் பெற்ற உருளைக்கிழங்கு ரகத்தை, தங்க ளின் அனுமதியின்றிப் பயிரிட்டு விற்பனை செய்து வருவதாக அம் மாநிலத்தைச் சேர்ந்த 9 விவசாயி கள் மீது பெப்சிகோ (Pepsico) நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. இதற்கு குஜராத் மட்டுமன்றி நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின் றனர்.
இதுகுறித்து, தமிழகத்தைச் சேர்ந்த விவசாய சங்க நிர்வாகிகள், 'இந்து தமிழ்' நாளிதழிடம் கூறிய தாவது:
ஆறுபாதி கல்யாணம் (தற்சார்பு பசுமை கிராமங்கள் இயக்க நிறு வனர்): கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்திய விவசாயிகளின் உரிமை களுக்குள் தலையிடக் கூடாது. சுதேசியை பேசி ஆட்சிக்கு வந்த பாஜகவைச் சேர்ந்த பிரதமர் மோடியின் சொந்த மாநிலத்திலேயே இந்த பிரச்சினை எழுந்துள்ளது மிகவும் அபாயகரமானது. இது இந்திய விவசாயிகளின் சுதேசி இறையாண்மைக்கு எதிரானது.
நாடு முழுவதும் தற்சார்பு கிரா மங்களை உருவாக்கி, வேளாண் உற்பத்திப் பொருட்களை அங் கேயே விவசாய உற்பத்தியாளர் குழுக்கள் மூலம் மதிப்புக் கூட்டி விற்பனை செய்யும் வாய்ப்பை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்தித் தருவது ஒன்றே இதற்குத் தீர்வு. மேலும், விவசாயிகளைப் பாதிக் கும் வகையில் பன்னாட்டு கார்ப்ப ரேட் நிறுவனங்களுக்கு அரசு வழங்கியுள்ள உரிமங்களை ரத்து செய்ய வேண்டும்.
குஜராத்தில் தற்போது பிரச் சினை எழுந்துள்ள எப்.சி. 5 உரு ளைக்கிழக்கு ரகத்துக்கு மாற்றாக புதிய ரகத்தை மத்திய அரசின் வேளாண் ஆராய்ச்சி மையம் கண்ட றிந்து விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.ஆர்.பாண்டியன் (தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங் களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்): விவசாயிகள் விளை விக்கும் பொருட்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்யும் நிறு வனம் விவசாயிகளின் சாகுபடி உரிமை சார்ந்த விஷயங்களில் தலையிடக் கூடாது. இதுபோன்ற அச்சுறுத்தல்கள் எழுந்தால் எந்தப் பொருளையும் விவசாயி உற்பத்தி செய்ய முடியாது. இது விவசாயி களை அடிமைப்படுத்த முயலும் உத்தியாகும். மத்திய, மாநில அரசுகள் கார்ப்பரேட் நிறுவனங் களுக்கு முக்கியத்துவம் அளிக்கா மல், விவசாயிகளின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து, உரிய விலை கொடுத்துப் பாதுகாக்க வேண்டும்.
அரிச்சலூர் செல்வம் (தமிழ் நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் மாநில ஒருங் கிணைப்பாளர்): விதைகள் சட்டம் விவசாயிகளைக் கட்டுப்படுத்தாது. கார்ப்பரேட் நிறுவனங்களின் அத்து மீறல்களை விவசாயிகளின் கூட்டுப் போராட்டங்கள்தான் கட்டுப்படுத் தும். ஏற்கெனவே மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரி மற்றும் பருத்தியை நம்நாட்டில் புகுத்த முற்பட்டபோது, விவசாயிகள் மற் றும் மக்களின் தொடர் போராட் டங்கள்தான் அதை தடை செய்ய வழியை ஏற்படுத்தியது.
அனைத்து விதைகளையும் ஹைபிரிட் விதைகளாக மாற்றி விட்டால், அந்த விதைகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களைத்தான் விவசாயிகள் நம்பியிருக்க வேண் டிய நிலை உருவாகும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கக்கூடாது.
சுவாமிமலை சுந்தரவிமல் நாதன் (காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க தஞ்சாவூர் மாவட் டச் செயலாளர்): இன்று குஜராத்தில் ஏற்பட்ட நிலை நாடு முழுவதும் ஏற்பட வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஈரோடு மஞ்சள், திருவையாறு வாழை உள்ளிட்டவற்றுக்குக்கூட இந்த நிலை வரலாம். எனவே, இதை கடுமையாக எதிர்க்கிறோம்.
நம்மாழ்வாரின் எச்சரிக்கை
இந்தப் போக்கு தொடர்ந்தால் நம்நாட்டின் தற்சார்பு நிலைக்கு பாதிப்பு ஏற்படும். விவசாயிகளுக்கு ஆபத்து ஏற்படுத்துவதற்கான அறிகுறியாகவே இதைப் பார்க்க வேண்டும். இதைத்தான் மறைந்த இயற்கை வேளாண் வல்லுநர் நம்மாழ்வார் தொடர்ந்து எச்சரித்து வந்தார்.
இதைத் தடுக்காமல் விட்டால் மரபணு மாற்றப்பட்ட கத்தரி, பருத்தி உள்ளிட்ட அனைத்தும் மீண் டும் வந்துவிடும் வாய்ப்புள்ளது. விதைகளுக்கு நிறுவனங்களை சார்ந்திருக்கும் நிலை உருவாவது நமது தற்சார்பு நிலைக்கு ஊறு விளைவிக்கும் என்பதில் ஐய மில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT