Published : 25 Apr 2019 07:54 PM
Last Updated : 25 Apr 2019 07:54 PM
மக்களவைத் தேர்தல் முடிவுகளில் கமலுடைய கட்சியின் நிலையை, பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் கணித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி 2018-ம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கப்பட்டது. சமீபத்தில் நடைபெற்ற தமிழகம், புதுச்சேரியின் 40 மக்களவை தொகுதிகளிலும் தனித்தே போட்டியிட்டார் கமல். தனது பிரச்சாரப் பயணத்தில் அனைத்து கட்சிகளையும் கடுமையாக தாக்கிப் பேசினார்.
மேலும், இந்தத் தேர்தலில் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட்டுள்ளார். மே 23-ம் தேதி வரவுள்ள தேர்தல் முடிவுகளில், அரசியல் களத்தில் கமலின் நிலை என்ன என்பது தெரியவரும்.
இந்நிலையில் பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் கமலுடைய கட்சியின் அரசியல் நிலையை தனது ட்விட்டர் பதிவில் கணித்துள்ளார். இது தொடர்பாக, "என் கணிப்பு சரியாக இருந்தால் கமல் மே 23 ல் 6% க்கு மேல் ஓட்டுக்கள் பெற்று வரும் சட்டமன்றத்தேர்தலில் தவிர்க்க முடியாத ஒரு முக்கிய இடம் பிடிப்பார்" என்று தெரிவித்துள்ளார் எஸ்.வி.சேகர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT