Published : 29 Apr 2019 12:00 AM
Last Updated : 29 Apr 2019 12:00 AM
தமிழகம் முழுவதும் சவடுமண் குவாரிகளுக்கு உடனே அனுமதி கிடைக்கும் நிலையில் காளவாச லுக்கு மண் அள்ள அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால் காளவாசலில் செங்கல் தயாரிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
கட்டிடப் பணிகளுக்கு செங்கல் அவசியமான ஒன்று. பிளே ஆக்ஸ், ஹாலோ பிளாக் போன்றவை வந்தாலும் செங்கல் பயன்பாடு குறையவில்லை. சவடு மண் கிடைக்கும் பகுதிகளில் குடிசைத் தொழிலாக இருந்த செங்கல் தயாரிப்பு, பல்வேறு காரணங் களால் நலிவடைந்து வருகிறது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 200-க்கும் மேற்பட்ட செங்கல் காளவாசல்கள் இயங்கி வந்தன. இங்கு செங்கல், சித்துக்கற்கள் தயாரிக்கப்படும். மானாமதுரை கண்மாய் களிமண்ணும், வைகை ஆற்றையொட்டிய சவடு மண்ணும் இத்தொழில் வளரக் காரணமாக இருந்தது. மூன்று மாதங்கள் மழைக்காலங்களைத் தவிர, மற்ற மாதங்களில் தொடர்ந்து தொழில் நடக்கும்.
ஆயிரத்துக்கும் மேற்பட்டோ ருக்கு வேலைவாய்ப்பு தந்தது. லாரி ஓட்டுநர், லோடு மேன் என மறைமுகமாகவும் பல ஆயிரம் பேர் பயனடைந்தனர். மானாமதுரை செங்கல், கடல் காற்று, உப்புத் தண்ணீர் தாக்கினால்கூட குறைந்தது நூறு ஆண்டுகளுக்கு தாக்குப்பிடிக்கும். இதனால் ராமநாதபுரம் மாவட்டம் கடற்கரைப் பகுதியான கீழக்கரை, சாயல்குடி, மாரியூர், தேவிபட்டினம், ராமேசுவரம், பாம்பன், சேதுக்கரை உள்ளிட்ட இடங்களில் மானாமதுரை செங் கலுக்கு கிராக்கி உள்ளது.
அதேபோல் கடந்தக் காலங் களில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கான்கிரீட் தளம் அமைக்க மானாமதுரை சித்துக்கற்களைத் தான் பயன்படுத்தினர். இன்றைக் கும் அந்த கட்டிடங்கள் சேத மடையாமல் கம்பீரமாக உள் ளன. மேலும் இன்றைக்கும் கோயில் கோபுரங்கள், சிற்பம், அழகு வேலைப்பாடுகளுக்கு சித்துக் கற்களை பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் தற்போது மண் கிடைக்காததால் காளவாசல்களில் செங்கல் தயாரிப்பு தொழில் நலிவடைந்து வருகிறது. இதேநிலை தான் தமிழகம் முழுவதும் உள்ளது. இது குறித்து மானாமதுரை காளவாசல் உரிமையாளர் பி.சிவமணிகண்டன் கூறியதாவது:
காளவாசல் தொழில் சிறந்து விளங்கியதால் காதி மற்றும் கதர்த் தொழில்கள் துறை சார்பில் செங்கல், ஓடு தொழிலாளர் கூட் டுறவு குடிசை தொழில் சங்கத்தை மானாமதுரையில் 1976-ல் தொடங் கினோம். அதன் மூலமே செங் கல் விற்பனை செய்து வந்தோம்.
சேம்பர்கள் வரத்தொடங்கி யதும், அதற்கு ஈடுகொடுக்க முடியாமல் காளவாசலில் செங்கல் தயாரிப்பு ஆட்டம் காணத் தொடங்கியது. 200 காளவாசல் இருந்த மானாமதுரையில் தற் போது 18 தான் உள்ளது.
மேலும் மண் தட்டுப்பாட்டால் செங்கல் தயாரிப்பை விட்டு விட்டோம். தற்போது சித்துக் கற்கள் மட்டுமே தயாரிக்கிறோம். ஏற்கெனவே 2 ஆண்டுகளுக்கு முன், அள்ளிய மண்ணைக் கொண்டே தொழில் செய்கிறோம். மண் காலியாகிவிடக் கூடாது என்பதற்காக 6 பேர் வேலை செய்த காளவாசலில் தற்போது ஒருவர் மட்டுமே வேலை செய்கிறார்.
சவடு மண் பெயரில் மணல் அள்ளும் குவாரிகளுக்கு உடனுக் குடன் அனுமதி கிடைக்கிறது. ஆனால் காளவாசலுக்காக சவடு மண் அள்ள எங்களுக்கு அனுமதி தர அதிகாரிகள் மறுக்கின்றனர். இதனால் இன்னும் சில ஆண்டுகளில் காளவாசல் தொழிலே மறைந்துவிடும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT