Published : 14 Apr 2019 07:13 AM
Last Updated : 14 Apr 2019 07:13 AM
மக்களவைத் தேர்தலில் காங் கிரஸ் - திமுக கூட்டணிக்கு வாக் களித்தால் பயங்கரவாதிகளின் கரங்கள் வலுப்படும் என வாக் காளர்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்தார்.
தமிழகத்தில் பாஜக - அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆத ரித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று தேனி மற்றும் ராமநாத புரத்தில் பிரச்சார பொதுக்கூட் டங்களில் பங்கேற்றார். ராமநாத புரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்கள் நயினார் நாகேந் திரன் (ராமநாதபுரம்), எச்.ராஜா (சிவகங்கை), தமிழிசை சவுந் தரராஜன் (தூத்துக்குடி), திரு நெல்வேலி அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன், பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகர் ஆகியோரை ஆதரித்து பிரதமர் மோடி பேசியதாவது:
நூறு ஆண்டுகளுக்கு முன் ஜாலியன் வாலாபாக்கில் படு கொலை செய்யப்பட்ட தியாகி களுக்கு வணக்கம் செலுத்து கிறேன். நம்பிக்கை மற்றும் ஆன்மிக அடிப்படையில் காசியும், ராமேசு வரமும் இணைக்கப்பட்டுள்ளன. காசி மக்களவை உறுப்பினராக நான் ராமநாதபுரம் வந்துள்ளேன். இங்கு கலாம் நினைவு நமக்கு வருகிறது. அவரது கனவுகளின்படி நாட்டை புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
அனைவருக்கும் வங்கி கணக்கு
மேம்பாடு, அனைவருக்குமான மேம்பாடு, அனைவருடன் இணைந்து எல்லோருக்குமான மேம்பாடு ஆகிய 3 முக்கியக் குறிக் கோள்களுடன் நாம் செயல்பட்டு வருகிறோம்.
ஏழ்மையை ஒழிக்க அனைவருக் கும் வங்கிக் கணக்கு, ஏழை களுக்கு இலவச எரிவாயு வழங் கப்பட்டுள்ளது. சுகாதார நிலையை 38 சதவீதத்திலிருந்து 98 சதவீதமாக உயர்த்தியுள்ளோம். 50 கோடி மக் களுக்கு ஆயுஷ் மான் பாரத் திட்டம் மூலம் தரமான சிகிச்சை கிடைக்க மருத்துவக் காப்பீடு வழங்கப்பட் டுள்ளது. சுற்றுலாவை மேம்படுத்த ராமேசுவரம் - தனுஷ் கோடிக்கு புதிய ரயில்பாதை, 100 ஆண்டு கடந்த பாம்பன் ரயில் பாலத்துக்கு பதிலாக புதிதாக ஒரு சிறந்த ரயில் பாலம் அமைக்கப்பட உள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி யின் தேர்தல் அறிக்கையில் தூய்மையான குடிநீர் வழங்க வும், நீர் மேலாண்மையை செயல் படுத்தவும் உறுதி அளிக்கப்பட்டு உள்ளது. பாஜக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், நீர்வளத் துறைக்கு தனி அமைச்சகம், மீன் வளத் துறைக்கும் புதிய அமைச் சகம் ஏற்படுத்தப்படும்.
மீனவர்களுக்கும் கடன் அட்டை
விவசாயிகள்போல மீனவர் களுக்கும் கிசான் கடன் அட்டை வழங்கப்படும். பாஜக ஆட்சியில் 1900 மீனவர்கள் இலங்கை சிறை களில் இருந்து விடுவிக்கப்பட் டுள்ளனர். காங்கிரஸ் அரசு துறை முகங்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்தவில்லை. மீனவர்களின் துன்பங்களை நீக்கவில்லை.
துறைமுகங்களின் கையாளும் தன்மை இரட்டிப்பாக்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளோம்.
நாம் முன்னேற்றத்துக்காக பாடுபடும்போது, எதிரிகள் நாட்டை அழிவுப் பாதைக்கு பி்ன் னோக்கி இழுத்துச் செல்கின்ற னர். காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு நாட்டைப் பற்றிய தொலை நோக்குப் பார்வை இல்லை. பாது காப்பு அமைப்புகள் துல்லியத் தாக்குதல் நடத்தியதைகூட காங் கிரஸ் - திமுக கூட்டணியினர் அவமரியாதை செய்கின்றனர். நாம் எந்த பயங்கரவாதத்தையும் அனுமதிக்க மாட்டோம்.
பண்பாட்டை எதிர்ப்பவர்கள்
காங்கிரஸ், திமுக, முஸ்லிம் லீக் கட்சிகள் நாட்டின் பண்பாடு, கலாச்சாரத்தை எதிர்ப்பவர்களாக உள்ளனர். முத்தலாக் முறை பெண்களுக்கு எதிராக உள்ளது. அதனால் நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வந்தோம். அப்போது காங்கிரஸ், திமுக, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
சபரிமலை விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் நமது நம்பிக்கையையும், உரிமைகளையும் குலைக்க முயன்றன. பாஜக இருக்கும் வரை நமது நம்பிக்கை, கலாச்சாரத்தை அழிக்க முடியாது.
நீதியைப்பற்றி பேசும் காங் கிரஸ் பெரும்பாலான மக்களுக்கு அநீதியையே ஏற்படுத்தி இருக் கிறது. 356-வது சட்டப்பிரிவை பயன்படுத்தி எம்ஜிஆர் அரசு, கேரளா அரசு, ஏன் கருணாநிதி அரசைக்கூட காங்கிரஸ் கலைத் துள்ளது. வடக்கு, தெற்கு என மோதலை உருவாக்கும் முயற்சி யில் ஈடுபட்டது. வரும் 18-ம் தேதி காங்கிரஸ், திமுக, முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு வாக்களித்தால் அதிக மான வரிவிதிப்புக்கும், குறை வான முன்னேற்றத்துக்கும் வாக் களிப்பதாக அர்த்தம். அவர் களுக்கு வாக்களிப்பது என்பது பயங்கரவாதிகளின் கரங்களை வலுப்படுத்தவும், அரசியலில் கிரி மினல்களை கொண்டு வருவதற் கான வாய்ப்பாக அமையும்.
இங்குள்ள மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளையும், ஈஸ்டர் வாழ்த்துகளையும் தெரி வித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
பிரதமரின் ஆங்கில உரையை எச். ராஜா தமிழில் மொழி பெயர்த்தார்.
தேனி கூட்டத்தில்...
முன்னதாக தேனி கண்ட மனூர் விலக்கில் நடந்த பிரச் சாரக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் பிரதமர் மோடி பேசியதாவது: எம்ஜிஆர், ஜெயலலிதா செய்த நலத் திட்டங்களால்தான் பொது மக்கள் ஏழ்மை நிலையில் இருந்து விடுபட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன் திமுக தலைவர், தனது எஜமானரை (ராகுல் காந்தி) பிரதமராக முன்மொழிந்தார். இதை பொது மக்களோ, கூட்டணிக் கட்சிகளோ விரும்பவில்லை. ஏனென்றால், அங்குள்ள ஒவ் வொரு கூட்டணிக் கட்சியினருக் கும் பிரதமர் ஆசை உள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் நிதியமைச்சராக (ப.சிதம்பரம்) இருந்தார். அதைப் பயன்படுத்தி அவரது மகன் தேசத்தைக் கொள்ளை அடித்தார். காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போதெல் லாம் இதுபோன்று நடந்தது. காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநி லங்களில் ஏழைகளுக்கும், குழந்தைகளுக்கும் ஒதுக்கப் பட்ட நிதியை தேர்தலுக்காக செலவு செய்கின்றனர்.
உங்கள் காவலாளியாக நான் இருக்கிறேன். எதிர்க்கட்சிகள் என்ன திருட்டுத்தனம் செய் தாலும் அவர்கள் இந்தக் காவ லாளியால் பிடிக்கப்படுவர். நான் தமிழகத்தை வளமான மாநிலமாக மாற்ற நினைக்கிறேன். எனவே எதிர்க்கட்சிகளின் விளை யாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இலங்கை தமிழ் சகோதரர்களின் வளத்துக்காக தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.
இங்குள்ள வாரிசு, குடும்ப, ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். காங்கிரஸும், திமுகவும் தேசத்துக்கு எதிரான வர்கள். இவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்.
போடி - மதுரை அகல ரயில் பாதைப் பணிகள் விரைவாக நடக்கின்றன. மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மூலம் தேனி மக்கள் அதிகம் பயன் அடைவர். ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா மூலம் இம்மாவட் டம் வளம் பெறும். தமிழகத் தில் லட்சக்கணக்கான விவசாயி கள் ரூ. 4 ஆயிரம் கோடிக்கு மேல் பலன் பெற்றுள்ளனர். விவ சாய பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை 1.5 மடங் காக அதிகரித்துள்ளோம். வைகை நதியை கங்கை நதி போல் சீர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
காவலாளியாக நிற்பேன்
கடினமான நேரங்களில் உங் களுடன் இந்த தேசத்தின் காவ லாளியாக நிற்பேன். இது இறை வழிபாட்டை மதிக்கும் அரசு. சுவாமி ஐயப்பன் மற்றும் சுந்தர மகாலிங்க சுவாமி கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு வசதி கள் செய்து தரப்படும்.
இந்த மண் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். மண். ஜெயலலிதா போட்டியிட்ட மண். ஆனால், காங்கிரஸால் இங்குள்ள ஒருவரை கூட வேட்பாளராகக் கொண்டுவர முடியவில்லை. தொடர்ந்து வெளி யூர்களில் இருந்தே வேட்பாளர் களை இறக்குமதி செய்கிறார்கள். இவ்வாறு மோடி பேசினார்.
பிரதமர் மோடியின் ஆங்கில உரையை பாஜக மாநில செய லாளர் ஆர்.ஸ்ரீனிவாசன் தமிழில் மொழிபெயர்த்தார்.
இக்கூட்டத்தில் கூட்டணி வேட் பாளர்கள் பொன்.ராதாகிருஷ்ணன் (கன்னியாகுமரி), ரவீந்திரநாத் குமார் (தேனி) ராஜ்சத்யன் (மதுரை), ஜோதிமுத்து (திண்டுக் கல்), அழகர்சாமி (விருதுநகர்), லோகிராஜன் (ஆண்டிபட்டி) மயில் வேல் (பெரியகுளம்), தேன்மொழி (நிலக்கோட்டை) உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT