Published : 23 Mar 2019 09:08 AM
Last Updated : 23 Mar 2019 09:08 AM

தமிழக காங்கிரஸ் 8 தொகுதி வேட்பாளர் அறிவிப்பு: சிவகங்கையில் இழுபறி

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்று வரும், நாளை வரும் என பெரிய போராட்டத்திற்கு இடையே நேற்று இரவு பட்டியல் வெளியானது. தமிழகத்தில் 9 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் 8 தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்தது. சிவகங்கை தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய வேட்பாளர் பட்டியல் மற்றும் தமிழக வேட்பாளர் பட்டியல் நேற்று இரவு வெளியானது. தமிழக காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை இறுதிப்படுத்தும் கூட்டம் நேற்று மாலை முதல் நடந்தது.

இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல், சோனியா, முகுல் வாஸ்னிக், சிதம்பரம் மற்றும் மாநிலங்களின் தலைவர்கள், முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் ஒவ்வொரு மாநிலமாக அந்தந்த மாநிலத் தலைவர்கள் ஆலோசனைப்படி விவரம் கேட்டு இறுதிப்படுத்தப்பட்டது.

கூட்டம் முடிந்தவுடன் நேற்று இரவு சில மாநிலங்களில் பட்டியல் வெளியானது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் 1.திருவள்ளூர், 2.அரக்கோணம், 3.ஆரணி, 4.திருச்சி, 5.சிவகங்கை, 6.தேனி, 7.விருதுநகர், 8. கரூர் 9.கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இதில் 1. .திருவள்ளூர் – ஜெயக்குமார் 2. சிவகங்கை - அறிவிக்கப்படவில்லை. 3. விருதுநகர் - மாணிக் தாகூர் 4. தேனி - ஈவிகேஎஸ் இளங்கோவன் 5. திருச்சி – திருநாவுக்கரசர் 6. கரூர் - ஜோதிமணி 7. கிருஷ்ணகிரி - டாக்டர் செல்லக்குமார் 8. ஆரணி-விஷ்ணுபிரசாத் 9. கன்னியாகுமரி - வசந்தகுமார். என அறிவிக்கப்பட்டுள்ளது

இதில் சிவகங்கை தொகுதிக்கு யார் வேட்பாளர் என்பதில் அடுத்த போட்டி உள்ளதால் அந்த தொகுதி மட்டும் அறிவிக்கப்படவில்லை சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி இல்லை என்பது உறுதி ஆனாலும், தனது ஆதரவாளர் ஒருவரே வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்று ப.சிதம்பரம் கேட்பதாலும் சுதர்சன நாச்சியப்பனும் அங்கு போட்டியிட விரும்புவதாலும் சிவகங்கை தொகுதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

தொகுதியின் பெயர்வேட்பாளர் பெயர்
திருவள்ளூர் (தனி)கே.ஜெயக்குமார்
கிருஷ்ணகிரிஏ.செல்லக்குமா
ஆரணி.எம். கே. விஷ்ணு பிரசாத்
கரூர்ஜோதி மணி
தேனிஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
விருதுநகர்மாணிக் தாக்கூர்
கன்னியாகுமரிஹெச். வசந்தகுமார்
புதுச்சேரிவைத்திலிங்கம்
திருச்சிசு. திருநாவுக்கரசர்

 

 

இதில் தேனி தொகுதியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். தேனி தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன், ரவிந்திரநாத்தும், ஆன்டிபட்டி தொகுதி முன்னாள் எம்எல்ஏ தங்க தங்கச் தமிழ்செல்வன் அமமுக சார்பிலும் போட்டியிடுகின்றனர். இன்னும் சிவகங்கை தொகுதிக்கு மட்டும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.

தேனி தொகுதியில் போட்டியிடும் இருவேட்பாளர்களும் அந்த தொகுதியைச் சேர்ந்தவர்கள், ஆனால், தொகுதிக்கு தொடர்பு இல்லாத இ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது அங்கு வலுவில்லாத வேட்பாளரை களமிறங்கிவிட்டதாக தொண்டர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

மேலும், அதிமுக வேட்பாளர் ரவிந்திர நாத்துக்கும், அமமுக சார்பில் போட்டியிடும் தங்க தமிழ்செல்வனுக்கும் இடையே கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் தம்பித்துரை போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சார்பில் ஜோதிமணி போட்டியிடுகிறார். வலிமையான வேட்பாளர் தம்பித்துரைக்கு எதிராக ஜோதி மணி கடும் சவால்அளிப்பாரா என்பதும் சந்தேகமே.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x