Published : 01 Apr 2014 10:29 AM
Last Updated : 01 Apr 2014 10:29 AM
திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா வரும் 8-ம் தேதி பிரச்சாரம் செய்ய உள்ளார். முதல்வர் பிரச்சாரம் செய்ய உள்ள இடம் திடீரென மாற்றப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி, அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்துவரும் ஏப்ரல் 8-ம் தேதி ஆவடியில் பிரச்சாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டது.
இதற்காக, ஆவடி சிடிஎச் சாலையில் உள்ள கவரைப் பாளையம் என்ற இடத்தில் 9 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு, கடந்த 10 நாட்களுக்கும் மேலாக, ஜேசிபி இயந்திரம் மூலம் மண் கொட்டி சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது. மேடை அமைக்க சவுக்குக் கட்டைகளும் கொண்டுவந்து இறக்கப்பட்டுள்ளன. அத்துடன், முதல்வரின் ஹெலிகாப்டர் இறங்குவதற்காக அருகில் உள்ள கல்லூரி மைதானத்தில் ஹெலிபேட் அமைக்கும் பணியும் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், ஓ.பன்னீர் செல்வம், ரமணா, மூர்த்தி மற்றும் அப்துல் ரஹீம் மற்றும் கட்சி நிர்வாகிகளும் முதல் வர் பேச உள்ள இடத்தை ஞாயிற்றுக் கிழமை ஆய்வு செய்தனர். அப்போது முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகளும் உடன் வந்தனர்.
முதல்வரின் பிரச்சாரத்தைக் காண அதிகளவில் பொதுமக்க ளும், கட்சித் தொண்டர்களும் திரள் வார்கள் என கருதப்படுவதால், அதற்கேற்ப அங்கு போதிய இடவசதி இல்லை எனவும், கூட்டத்துக்கு வரும் வாகனங்களை நிறுத்தவும் போதிய இடவசதில்லை எனவும் கருதப்பட்டது.
இதையடுத்து, பெரியபாளை யம் செல்லும் வழியில் வடமதுரை என்ற இடத்தில் முதல்வர் கலந்து கொள்ளும் பிரச்சாரக் கூட்ட இடத்தை மாற்ற முடிவு செய்யப்பட் டுள்ளது என்கிற தகவலை அதிமுக-வின் வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT