Published : 02 Mar 2019 08:54 AM
Last Updated : 02 Mar 2019 08:54 AM
மகள் குணமாகிவிட்டால் போதும், வேறு எதுவும் எங்களுக்கு தேவை இல்லை என்று, எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டு பாதிக்கப்பட்ட திருப்பூர் சிறுமியின் பெற்றோர் வேதனை தெரிவிக்கின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் மங்கலம் பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு ஆண், பெண் என இரட்டை குழந்தைகள். இருவரும் 7 மாதங்களில் பிறந்தவர்கள். அப்போது மகள் வெறும் 700 கிராம்தான் இருந்தார். மகளுக்கு சளி பிரச்சினை ஓயாமல் இருந்ததால், கோவை அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அங்கு மகளுக்கு ரத்த அணுக்கள் செலுத்தியபோது அதில் எச்ஐவி தொற்று இருந்திருப்பதாக பெற்றோர் புகார் அளித்தனர். அங்கு தொடர்ந்து சிகிச்சை எடுக்க முடியாமல் குக்கிராமத்துக்கு திரும்பினர்.
இந்நிலையில் தம்பதியிடம் நேரில் பேசியபோது, “எங்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகளாகிறது. இரட்டை குழந்தைகளுக்கு இரண்டு வயதாகிறது. ஒருவர் மட்டுமே சம்பாத்தியம் என்பதால், அதை வைத்து குடும்பம் நடத்த வேண்டிய நிலை. இந்நிலையில், மகளுக்கு அடிக்கடி மூச்சுத்திணறல் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு ரத்த அணுக்கள் ஏற்றப்பட்டன. வீடு திரும்பிய சில நாட்களில் மகளின் உடல்நிலை மோசமானதை அடுத்து மீண்டும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ரத்த சோதனை மாதிரி எடுத்தபோது எச்ஐவி இருப்பதாக தெரிவித்தனர். இது எங்களுக்கு அதிர்ச்சையை அளித்தது. எங்கள் மூவரையும் பரிசோதித்ததில் யாருக்கும் எச்ஐவி இல்லை என்பது தெரியவந்தது.
குழந்தைக்கு ஏற்றப்பட்ட ரத்த அணுக்களால்தான் எச்ஐவிபாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோவைஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து வழங்கப்பட்ட மாத்திரையும், மருந்தும்தீர்ந்துவிட்டன. மீண்டும் அங்கு சிகிச்சைக்கு குழந்தையை அழைத்துச்செல்ல அச்சமாகஉள்ளது. குழந்தையின் இந்நிலைக்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். எங்கள் மகள் குணமாகிவிட்டால் போதும்; வேறு எதுவும் தேவையில்லை” என்றனர்.
இந்நிலையில் திருப்பூர்அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று முன்தினம், தேசியகுழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்தியது. அப்போது, தொடர்சிகிச்சை எடுத்துக் கொள்ளும்படி அவர்கள் அறிவுறுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT