Published : 05 Sep 2014 09:30 AM
Last Updated : 05 Sep 2014 09:30 AM

குமரி மாவட்டத்தை கேரளத்துடன் இணைக்கப் போராடுவோம்: மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி

குமரி மாவட்டத்தை கேரளத்துடன் இணைக்க நாங்களே முன் நின்று போராடுவோம் என மத்திய கனரக தொழில் மற்றும் பொது தொழில் துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்பதற்காக பொன். ராதாகிருஷ்ணன் வியாழக் கிழமை சிவகாசி வந்தார். அவரை வரவேற்ற தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தினர் இந்தியாவில் சீனப் பட்டாசுகள் ஊடுருவலைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவரிடம் மனு அளித்தனர்.

பின்னர் நடைபெற்ற செய்தி யாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:

இந்துக்கள் ஒன்றுபட்டு சிறுபான் மையினருடன் ஒற்றுமைப் பட்டிருந்தால் கன்னியாகுமரி மாவட்டம் கேரளத்தில் இருந்து பிரிந்திருக்காது.

திருப்பதியும் தமிழகத்துக்கு வந்திருக்கும். கன்னியாகுமரி மாவட்டத்தை கேரளத்துடன் இணைக்க நாங்களே முன்னின்று போராடுவோம்.

தமிழர் பிரச்சினைகள் பற்றி விவாதம் செய்பவர்களைவிட எங்களுக்கு தமிழ்ப்பற்று உள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் உலகை ஆள வேண்டும் என்னும் சிந்தனையில் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் தயாரிக்க முடியாத பொருட்களை அயல் நாட்டினர் தயாரிக்க முன் வந்தால் அவர்களுக்கு ஊக்கமளிக்கப்படும். ஆனால், சீனப் பட்டாசுகள் இந்தியாவை ஆளுகின்ற வகையில் அனுமதிக்க மாட்டோம். பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழி லாளர்களை பாதிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படாது என்ற நம்பிக்கை உள்ளது.

இந்திய மீனவர்களை விடுவிக்கவும், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப் பட்டுள்ள விசைப் படகுகளை மீட்கவும் மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது.

இந்நிலையில் இந்த செய்திகுறித்து சுப்பிர மணியன் சுவாமி உட்பட யாரும் தனிப்பட்ட முறையில் கருத்து தெரிவித்தால் அது இந்திய அரசை அவமதிப்பதாகவே அர்த்தம் ஆகும் என்று பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x