Last Updated : 29 Mar, 2019 07:07 AM

 

Published : 29 Mar 2019 07:07 AM
Last Updated : 29 Mar 2019 07:07 AM

ஓபிஎஸ் மகனின் சொத்து விவகாரம்; அமமுகவுக்கு தகவல் தந்த ‘ஸ்லீப்பர் செல்’ யார்?- அதிமுக தீவிர விசாரணை

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத் தின் மகன் ரவீந்திரநாத் குமார்ின் வேட்புமனுவில் சொத்து விவரம் மறைக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தை உடனிருப்பவர்களே எதிரணிக்கு கசியவிட்டிருக்கலாம் என அதிமுக சந்தேகிக்கிறது. அந்த `ஸ்லீப்பர் செல்' யார் என்ற கோணத்தில் நிர்வாகிகள் விசாரிக் கின்றனர்.

தேனி மக்களவைத் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற் பட்டது. கட்சி விசுவாசிகள் பலர் இருக்கும்போது திடீரென வாரிசுக் குக் கிடைத்த வாய்ப்பு பலரையும் முணுமுணுப்பை ஏற்படுத்தியது.

இது அரசியல் எதிரியான அமமுகவுக்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஏற்கெனவே கட்சி யைக் கைப்பற்றியது, தகுதி இழப் புச் செய்தது, சின்னத்தைப் பறித்துக் கொண்டது என்று கோபத்தில் இருந்த அமமுக, அதிமுகவுக்கு எதிராக வலுவான வேட்பாளரை இறக்கத் தீர்மானித்தது.

இதன்படி ஆண்டிபட்டி இடைத் தேர்தலில் களமிறக்க நினைத்தி ருந்த தங்க தமிழ்ச்செல்வனை கட்சித் தலைமை தடம் மாற்றி தேனியில் களம் இறக்கியது. பிரபல மான முகம், சாதி வாக்கு, அறிமுக மான தொகுதி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வாக்குகளைப் பிரிக்கும் அம்சம் இவரிடம் இருந்த தால் அதிமுக தரப்பு அதிர்ச்சி அடைந்தது.

இது ஒருபுறம் இருக்க காங்கி ரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டது அதிமுகவுக்கு மேலும் பின்ன டைவை ஏற்படுத்தும் நிலையை உருவாக்கியது. மேலும் மாநில அளவிலான விஐபி தொகுதியாக வும் தேனி மாறியது.

பாஜக எதிர்ப்பு, சிறுபான்மை யினர் ஆதரவு வாக்குகள் திமுக கூட்டணிக்கு மாறுவதுடன் ஈவிகேஎஸ் இளங்கோவன் மூலம் நடுநிலை வாக்குகளும் அதிமுகவுக் குச் செல்வது தடுக்கப்படும் என் பதால் அமமுக உண்மையிலேயே உள்ளூர மகிழ்ச்சியடைந்தது.

அமமுகவைப் பொருத்தளவில் வெற்றி என்பதைக் கடந்து தங்கள் அரசியல் எதிரியான ஓபிஎஸ் அடுத்த கட்டத்துக்குச் சென்று விடக் கூடாது என்ற எண்ணமே மேலோங் கியது.

இதன் ஒரு பகுதியாக ரவீந்திர நாத் குமாரின் வேட்பு மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற முனைப்பில் நேற்று முன்தினம் தங்க தமிழ்ச்செல்வன் தேர்தல் அதி காரிகளிடம் வாதிட்டார். சொத்து விவரத்தை மறைத்து மனுத் தாக்கல் செய்துள்ளார் என்று இதற் கான விவரங்களை எடுத்துரைத் தார். ஆனால், அதிகாரிகள் இதை ஏற்கவில்லை.

ரூ.3.15 கோடி மதிப்பில் காற்றாலை

இதைத் தொடர்ந்து தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களி டம் கூறும்போது, அதிமுக வேட்பா ளர் ரவீந்திரநாத் குமார் தனது வேட்புமனுவில் கூறியுள்ள சொத்து விவரங்கள் முரண்பாடாக உள்ளன. சில சொத்துகள் மறைக்கப்பட்டு உள்ளன. விஜயாந்த் என்ற நிறுவனத் தில் ரவி, அவரது அக்காள் கவிதா பானு, தம்பி ஜெய்பிரதீப் ஆகியோர் பங்குதாரராக உள்ளனர். ரூ.24 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்ட இடத்தில் ரூ.3.15 கோடி மதிப்பில் காற்றாலை அமைக்கப்பட்டுள்ளது. இவற்றைச் சொத்து மதிப்பு ஆவணத்தில் தெரிவிக்கவில்லை. எனவே, இந்த மனுவைத் தள்ளு படி செய்ய வேண்டும் என்று தேர்தல் அதிகாரியிடம் கேட்டோம். விரை வில் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வோம் என்றார்.

இந்நிலையில் தங்கள் அணியில் இருந்தே இந்த விஷயம் எதிரணிக் குச் சென்றிருக்க வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் சந்தேகிக்கின் றனர். ‘ஸ்லீப்பர் செல்களாக’ செயல் பட்டு இங்குள்ள தகவல்களை வெளி யில் சொல்பவர்கள் யார் என்ற ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

தங்க தமிழ்ச்செல்வன் தரப்பில் கேட்டபோது, இது குறித்த ரகசியத் தகவல் சமீபத்தில்தான் கிடைத்தது. அதை வைத்து மனு தள்ளுபடிக்கு வாதிட்டோம். அதிகாரிகளே முடி வெடுத்திருக்கலாம். இருப்பினும் நீதிமன்றத்தை விரைவில் நாட உள்ளோம். இப்பிரச்சினையில் வெற்றி பெற்றே தீருவோம் என்றனர்.

இது குறித்து அதிமுக சட்டப் பிரிவு நிர்வாகிகள் சிலரிடம் கேட்ட போது, குறிப்பிட்ட நிறுவனத்தில் பங்குகள் வாங்கியிருப்பது உண்மைதான். அதற்காக அந்த நிறுவனச் சொத்து வேட்பாளருக்குச் சொந்தமானது என்று சொல்ல முடியாது.

உதாரணமாக அம்பானி நிறுவனத்தில் பங்குகள் வாங்கி இருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அந்நிறுவன லாபத் தில் ஒரு பகுதி தொகை கிடைக்கும். அதற்காக அந்த நிறுவனச் சொத்து தனக்கானது என்று எவரும் சொல்ல முடியாது. அடிப்படை இல் லாத குற்றச்சாட்டு இது. தோல்வி பயத்தில் அமமுகவினர் உளறிக் கொண்டிருக்கின்றனர். இவர்களை சட்டப்பூர்வமாகவும், அரசியல் ரீதியாகவும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம் என்றனர்.

பின்னணியில் யார்?

பொதுவான அரசியல் குற்றச் சாட்டுகளைக் கூறி வந்த தங்க தமிழ்ச்செல்வன் தங்களது மனுவையே தள்ளுபடி செய்யக் கூறும் அளவுக்குக் களம் இறங்கி இருப்பது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதன் பின்னணியில் என்ஜிஓ நிறுவனம் ஒன்றும் இருக்கலாம் என்ற கோணத்திலும் ஓபிஎஸ் தரப்பு விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x