Published : 13 Mar 2019 07:34 PM
Last Updated : 13 Mar 2019 07:34 PM

வேட்பாளர் தேர்வு உயர்மட்டக் குழுவிலிருப்பவருக்கும் மக்களவை தேர்தல்  சீட் நேர்காணல்: அதிமுகவில் சுவாரஸ்யம்

2019 மக்களவைத் தேர்தல் அ.இ.அ.தி.மு.க.வின் வேட்பாளர் தேர்வுக்குழுவில் இருப்பவரே மக்களவைத் தேர்தலில் தனக்கு சீட் கேட்க முடியுமா? செவ்வாயன்று அ.இ.அ.தி.மு.கவில் இது நடந்தது.

 

திருவள்ளூர் தொகுதியிலிருந்து இருமுறை எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்ட பி.வேணுகோபால் அதிமுக நிர்வாக உயர்மட்ட தேர்வுக்குழுவில் இருப்பவர். கடந்த 2 நாட்களில் சுமார் 1,400 வேட்பாளர்களை நேர்காணல் செய்த குழுவில் இவரும் இருந்தார். ஆனால் டாக்டர் வேணுகோபாலும் தொகுதிக்காக அதிமுக நேர்காணல் செய்யப்பட்டார்.

 

தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு வேணுகோபால் இது குறித்து தெரிவிக்கும் போது, “இப்படித்தான் இருக்க வேண்டும். இதுதான் எங்கள் கட்சியின் ஜனநாயக நடைமுறை” என்றார் பெருமிதமாக.

 

திங்களன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் பி.ரவீந்திரநாத் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் திங்களன்று கூறும்போது, நான் அமெரிக்காவில் படித்து முடித்துவிட்டு, நேரடியாக மீனம்பாக்கத்தில் வந்திறங்கி, ‘என் அப்பா இந்த பதவியில் உள்ளார். அதனால் எனக்கு சீட் கொடுங்கள்’ என்று கேட்கவில்லை. 18 வயதில் இருந்து கட்சியில் உள்ளேன்.தேனி மாவட்டத்தில் நான் போகாத வீடுகளே இல்லை.

 

கட்சியில் படிப்படியாக முன்னேறி, தற்போது மக்களுக்கு சேவையாற்ற வந்துள்ளேன். நான் வளர்ந்த பகுதி முன்னேற வேண்டும் என்பதற்காக போட்டியிடுகிறேன்.

 

திறமை இருந்தால், யார் மகனாக இருந்தாலும் தேர்தலில் வாய்ப்பு கிடைக்கும் என்று கட்சி ஒருங்கிணைப்பாளரே கூறியுள்ளார். திறமையாகவும், கட்சிக்கு உண்மையான விசுவாசமாகவும் இருந்தால் யாருக்கும் இங்கு வாய்ப்பு கிடைக்கும்.

 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது 37 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. தற்போது 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்  என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x