Published : 07 Mar 2019 07:03 AM
Last Updated : 07 Mar 2019 07:03 AM
பசுமைப் பட்டாசு தயாரிப்புக்கான் நீரி அமைப்பு பரிந்துரைக்கு பட்டாசு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள் ளது. மத்திய அரசின் ஆதரவான நிலைப்பாட்டால் உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் சாதகமான நிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பட்டாசு உற்பத் திக்கும், விற்பனைக்கும் தடை விதிக் கக் கோரி, கடந்த 2015-ல் உச்ச நீதி மன்றத்தில் தனி நபர் வழக்கு தொட ரப்பட்டது. இவ்வழக்கின் இடைக் காலத் தீர்ப்பு கடந்த அக்.22 மற்றும் 31-ம் தேதிகளில் வெளியிடப்பட்டது. அதில், பட்டாசு உற்பத்தியில் பேரியம் பயன்படுத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. மேலும், பசுமைப் பட்டாசுகளை மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதித்தது.
பேரியத்தை பயன்படுத்தியே கம்பி மத்தாப்பு உள்ளிட்ட மத்தாப்பு வகை பட்டாசுகள், தரைச் சக்கரம், பூச்சட்டி மத்தாப்பு மற்றும் குறிப்பிட்ட ரக பேன்ஸி ரக பட்டாசுகளைத் தயாரிக்க முடியும். பேரியத்துக்குத் தடை விதிக்கப்பட்டதாலும், பசுமைப் பட்டாசு என்றால் என்ன என்று விளக் கம் இல்லாத காரணத்தாலும், கடந்த தீபாவளிக்குப் பிறகு விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் அத னைச் சுற்றியுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப் பட்டன. இதனால் சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.
தற்போது, அனைத்து பட்டாசு ஆலைகளும் திறக்கப்பட்டு வெடிக் கும் மற்றும் ஒலி எழுப்பக் கூடிய அணுகுண்டு பட்டாசு, லெட்சுமி வெடி, குருவி வெடி, சோல்சா வெடி தயா ரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வரு கிறது.
இந்நிலையில், உச்ச நீதிமன் றத்தில் நேற்று நடைபெற்ற பட்டாசு தொடர்பான வழக்கு விசாரணையின் போது பேரியம் இல்லாமல் பட்டாசு உற்பத்தி செய்வது கடினம் என மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இவ்வாறு பட்டாசுத் தொழிலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்துள்ளதற்கு பட்டாசு ஆலை உரிமையாளர்கள், தொழி லாளர்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
இதுகுறித்து, பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கூறியதாவது: பட்டாசுத் தொழிலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத் துள்ளது வரவேற்கத்தக்கது. அரசின் இந்த நடவடிக்கை மகிழ்ச்சி அளிக் கிறது. அதோடு, பட்டாசுத் தொழிலும் அதை நம்பியுள்ள 8 லட்சம் தொழி லாளர்களின் வாழ்வாதாரமும் காக் கப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது.
பேரியத்தை பயன்படுத்தாமல் பட் டாசு தயாரிப்பது இயலாத ஒன்று. அதோடு, மத்திய அரசின் தேசிய சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் (நீரி) அளித் துள்ள அறிக்கையிலும் பேரியத்தின் வீரியத்தைக் குறைத்து குறைந்த அள வில் புகை வெளியேறும் வகையில் பசுமை பட்டாசு தயாரிக்கலாம் என பரிந்துரைத்துள்ளதும் வரவேற்கக் கூடியது. மேலும், இவ்வழக்கின் இறுதித் தீர்ப்பும் பட்டாசுத் தொழி லுக்கு ஆதரவாக இருக்கும் என்ற நம்பிக்கை வந்துள்ளது.
இருப்பினும், சுற்றுச்சூழல் விதி 3பி-யில் இருந்து பட்டாசுக்கு விலக்கு அளித்தால் எதிர்காலத்தில் இதுபோன்ற வழக்குகளில் இருந்து பட்டாசுத் தொழிலை நிரந்தரமாகக் காக்க முடியும். இக்கோரிக்கையை யும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பரிந்துரைக்க வேண்டும் என்றனர்.
பட்டாசுத் தொழிலாளி செங்கமலப் பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து (33) கூறியதாவது: பட்டாசுத் தொழில்தான் எங்களது வாழ்வாதாரம். வேறு தொழில் தெரியாது. வேலையிழந்த நாட்களில் நாங்கள் பட்ட துயரம் கொஞ்சநஞ்சமில்லை. பட்டாசுத் தொழிலாளர்களை காப்பது அரசின் கடமை. மத்திய அரசின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கிறது. அதோடு, பட்டா சுத் தொழிலுக்கும், தொழிலாளர் களுக்கும் நிரந்தர பாதுகாப்புத் திட் டத்தையும் அரசு ஏற்படுத்த வேண் டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT