Last Updated : 03 Mar, 2019 10:29 AM

 

Published : 03 Mar 2019 10:29 AM
Last Updated : 03 Mar 2019 10:29 AM

அதிமுகவுக்கு எதிராக வெடிக்கும் பட்டாசுத் தொழிலாளர்

பட்டாசுத் தொழிலாளர் பிரச் சினையில் தமிழக அரசின் தலையீடு குறிப்பிடும்படியாக இல்லாததால் பட்டாசுத் தொழிலாளர்களின் ஆதரவு அதிமுகவுக்கு சரியத் தொடங்கியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் அதிமுக கோட்டையாக விளங்கி வரும் சிவகாசி, சாத்தூர் சட்டப் பேரவைத் தொகுதிகளில் தற் போது அதன் செல்வாக்கை மெல்ல மெல்ல இழந்து வருகிறது. சிவகாசி தொகுதியில் 1,17,253 ஆண் வாக்காளர்களும், 1,23,401 பெண் வாக்காளர்களும், இதரர் 22 பேர் உட்பட மொத்தம் 2,40,676 வாக்காளர்கள் உள் ளனர். கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட அதிமுக மாவட்டச் செயலரும் தற்போதைய பால்வளத் துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்தி ரபாலாஜி 76,734 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக கூட்டணி வேட்பாளர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜா சொக்கர் 61,986 வாக்குகள் பெற்றார். இருவருக்கும் இடையே வாக்கு வித்தியாசம் 14,748. இருப்பினும், இந்த முறை அதிமுக கோட்டையாக விளங்கும் சிவகாசி சட்டப் பேரவைத் தொகுதியில் முக்கியப் பிரச்சினையாகப் பட்டாசு ஆலை கதவடைப்புப் போராட்டம் விஸ் வரூபம் எடுத்துள்ளது. பட்டாசு ஆலை பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் தலையீடு இருந்தாலும் இது பட்டாசு தொழிலாளர்களுக்கு முழு திருப்தி அளிக்கவில்லை எனப் பரவலாகக் கூறப்படுகிறது. இதற்கு சுற்றுச்சூழல் விதியில் இருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்கக் கோரி தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்பதும், பட் டாசு ஆலை உரிமையாளர்கள் முதல்வர் உள்ளிட்டோரைச் சந்தித்து வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படா ததும் அதிமு கவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக தொகுதி மக்கள் கூறுகின்றனர்.

அதே நேரம், மாவட்டச் செயலரும் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி தனது பிரச்சாரத்தில், பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் அதிமுக அரசு மேற்கொண்டு வருகிறது. பட்டாசுத் தொழிலுக்கு தடை இல்லை என்ற உத்தரவை உச்ச நீதிமன்றத்தில் வாதாடி தமிழக அரசு தான் பெற்றுக் கொடுத்தது. தற்போது அனைத்து பட்டாசு ஆலைகளும் திறக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் மீண்டும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். எனவே, பட்டாசுத் தொழிலாளர்களின் முழு ஆதரவும் அதிமுகவுக்கு உள்ளது என்று தெரிவித்து வருகிறார். இருப்பினும், மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு எதிராகப் பட்டாசுத் தொழிலாளர்களின் மனநிலை பெரிய அளவில் பிரதிபலிக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x