Last Updated : 27 Mar, 2019 09:39 AM

 

Published : 27 Mar 2019 09:39 AM
Last Updated : 27 Mar 2019 09:39 AM

அதிமுக வேட்பாளரின் மஞ்சள் சட்டை சென்டிமென்ட்

தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் மஞ்சள் சட்டை ‘சென்டிமென்ட்டை’ கடைப்பிடித்து வருகிறார் சாத்தூர் சட்டப் பேரவை இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜவர்மன்.

சாத்தூர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜவர்மன். துரைப்பாண்டி என்ற தனது பெயரை மாற்றிக்கொண்டால் கட்சியில் பெரிய பொறுப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன் தனது பெயரை ராஜவர்மன் என மாற்றிக்கொண்டார்.

முள்ளிக் குளம் கிளைச் செயலர், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர், விருதுநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலர், விருதுநகர் மாவட்ட அதிமுக பொருளாளர் என அடுத்தடுத்து பல்வேறு பதவிகளை வகித்து வந்த வேட்பாளர் ராஜவர்மன். தற்போது விருதுநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணிச் செயலராகவும் பொறுப்பு வகிக்கிறார்.

மேலும் தனது பெயருக்கு மணி மகுடம் சூட்டும் வகையில் தற்போது சாத்தூர் இடைத் தேர்தலிலும் அதிமுக சார்பில் வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். அமைச்சரும் மாவட்டச் செயலருமான கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு மிக நெருக்கமான விசுவாசி என்பதால் இத்தொகுதியில் இவருக்கு சீட் வழங்கப்பட்டது. இதனால், சாத்தூரில் கட்சி நிர்வாகிகளிடையே உட்கட்சிப் பூசல் ஏற்பட்டுள்ளது.

ஆனாலும், தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல், வேட்பாளர் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்பதோடு, தேர்தலிலும் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக எப்போதும் மஞ்சள் சட்டை சென்டிமென்ட்டை ராஜவர்மன் கடைப்பிடிப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இருப்பினும், மஞ்சள் சட்டை சென்டிமென்ட் கைகொடுக்குமா என்பது தேர்தல் முடிவில்தான் தெரியவரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x