Published : 01 Apr 2014 11:16 AM
Last Updated : 01 Apr 2014 11:16 AM
கேளம்பாக்கம் அடுத்த சிறுசேரி தொழில் பூங்காவில் இயங்கி வரும் டெக்புரோ நிறுவன ஊழியர்களுக்கு கடந்த 8 மாதங் காக ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறி திங்கள்கிழமை ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து ஊழியர்கள் கூறுகையில், “சிறுசேரி தொழில் பூங்காவில் டெக்புரோ சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் 600-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்துவருகின்றனர். இவர்களுக்கு கடந்த 8 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.
இதுகுறித்து நிர்வாகத்திடம் கேட்டிருந்தோம். அவர்கள், தற்போது நிறுவனத்தின் தொழில் சிறப்பாக இல்லை. வங்கியில் கடன் கேட்டிருக்கிறோம். கிடைத்தவுடன் ஊதியம் வழங்குவதாகவும், மார்ச் 31-ம் தேதிக்குள் ஊதியம் வழங்கப்பட்டுவிடும் என்றும் உறுதியளித்திருந்தனர். இது வரை ஊதியம் வழங்கப்படவில்லை. இதைக் கண்டித்தும், உடனடியாக ஊதியம் வழங்க வலியுறுத்தியும், நிறுவனத்தின் வாயில் கதவை மூடி ஊழியர்கள் அனைவரும் உள்ளிருப்பு போராட்டம் நடத்திவருகிறோம்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT