Published : 08 Mar 2019 02:49 PM
Last Updated : 08 Mar 2019 02:49 PM
ஜெயலலிதா என்கிற அம்மா இல்லாத எங்களுக்கு பிரதமர் மோடிதான் தற்போது ‘டாடி’யாக இருந்து வழிநடத்துகிறார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் எல்லோரும் பாதுகாப்பாக உள்ளனர். அதேபோல், பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்திய அளவில் எல்லோரும் பாதுகாப்புடன் இருக்கிறார்கள்.
ஜெயலலிதா எனும் ஆளுமை கொண்ட அம்மா இல்லாமல் நாங்கள் தவித்து வருகிற இந்த நேரத்தில், பிரதமர் மோடிதான் எங்களுக்கு ‘டாடி’யாக இருந்து வழிகாட்டுகிறார்.
இந்தியாவை மோடியே மீண்டும் ஆள வேண்டும். அதேபோல், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி தொடரவேண்டும்.
இவ்வாறு ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT