Published : 17 Mar 2019 12:08 PM
Last Updated : 17 Mar 2019 12:08 PM
மதுரை தொகுதியில் அதிமுக போட்டியிடு வது உறுதியாகி உள்ளது. இந் நிலையில் வேட்பாளரை முடிவு செய்வதில் 2 அமைச்சர் களுக்கும், மாவட்டச் செயலா ளருக்கும் இடையே ‘பஞ்சாயத்து’ ஏற்பட்டுள்ளதால், இதுபோன்ற சிக்கலான தொகுதிகளுக்கு வேட்பாளரை முடிவு செய்ய அதிமுக கட்சித் தலைமை மாவட்டச் செயலாளர்களை அழைத்து இன்று ஆலோசனை நடத்துகிறது.
அதிமுக மெகா கூட்டணியை முன்பே அமைத்து விட்டாலும், இன்னும், அந்த கட்சிகளில் யார், யார், எந்தெந்த தொகுதியில் போட்டியி என்பதைக் கூட அறிவிக்க முடியவில்லை. சில தொகுதிகளை விட்டுக் கொடுப்பதில் அதிமுகவுக்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையே இன்னும் இழுப்பறி நீடிக்கிறது.
அதிமுக கட்சித் தலைமை, தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை முடிவு செய்து விட்டதாகக் கூறப்பட்டாலும், மதுரை உட்பட சில தொகுதிகளில் வேட்பாளர் தேர்வில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மற்ற தொகுதிகளில் மாவட்டத்தில் ஒரு அமைச்சர் அல்லது மாவட்டச் செயலாளர் முடிவு செய்த வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அதிமுக தலைமைக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆனால், மதுரை மாவட்டத்தில், அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி. உதயகுமார், முன்னாள் மேயரும், புற நகர் மாவட்டச் செயலாளருமான விவி. ராஜன் செல்லப்பா ஆகியோர் இடையே மதுரை தொகுதிக்கான வேட்பாளரை முடிவு செய்வதில் ‘பஞ் சாயத்து’ ஏற்பட்டுள்ளது. இந்த மூவரும் தற்போதைய எம்பி கோபாலகிருஷ்ணனை சிபாரிசு செய்யவில்லை. ஆனால், கோபாலகிருஷ்ணனுக்கு ‘சீட்’ பெற்றுக் கொடுக்க கட்சியின் ஒருங்கி ணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமே முயற்சி செய்கிறார். ஆனால், பன்னீர்செல்வம், தனது மகனுக்கு தேனியில் ‘சீட்’ கேட்பதால், பக்கத்து மாவட்டத்துக்கும் அவரால் தனது ஆதரவாளருக்கு சிபாரிசு செய்ய முடியாத சூழல் உள்ளது. கோபாலகிருஷ்ணன் அதிமுகவில் சசிகலாவை எதிர்த்து பன்னீர்செல்வத்துடன் வெளியேறியவர். கட்சியிலும், பொதுமக்களிடமும் பெரிய அளவில் கெட்ட பெயர் இல்லை. ஆனால், மதுரை மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர், நிர்வாகிகள் யாரும் அவரை பரிந்துரை செய்யாததே பின்னடைவாக உள்ளது.
இதனால் அதிமுக தலைமை மாவட்டச் செயலாளர்களை அழைத்து இன்று ஆலோ சனை நடத்த உள்ளது.
இதுகுறித்து மதுரை அதிமுக முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது: ‘‘ஓ. பன்னீர்செல்வம், தேனி மாவட்டத்தில் அவரது மகனுக்கும், பக்கத்து மாவட்டத்தில் ஆதரவாளருக்கும் ‘சீட்’ கேட்கிறார். விவி.ராஜன் செல்லப்பா அவரது மகனுக்கு ‘சீட்’ கேட்கிறார். இப்படி ஆளாளுக்கு தங்கள் ஆதர வாளர்களுக்கம், வாரிசுகளுக்கும் ‘சீட்’ கேட்டால் கட்சியில் உண்மையான உழைப் பாளிகளுக்கு எப்போது ‘சீட்’ கிடைக்கும்.
ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி வாரிசுகளுக்கு ‘சீட்’ கேட்க முடியுமா?. கட்சியில் எம்பி சீட் கேட்டு விண்ணப் பித்தவர்களிடம் கருத்து கேட்காமல், பஞ்சாயத்து செய்யும் அதிகாரத்தில் இருப்பவர்களை மட்டுமே அழைத்து, கட்சித் தலைமை ஆலோசனை கேட்டால் வேட்பாளருக்காக கட்சிக்காரர்கள் எப்படி வேலை செய்வர் என்றனர். இதுகுறித்து அதிமுகவில் ‘சீட்’க்காக முயற்சி செய்யும் முக்கிய நிர்வாகியிடம் கேட்டபோது, ஜெயலலிதா இருந்தபோது அவர் யாரை வேண்டுமென்றாலும் வேட் பாளராக அறிவிப்பார். அவருக்கென மக்களிடம் தனி செல்வாக்கு இருந்தது. அதுபோல, அவரது பிரச்சார பலமும் அதிகம். அதனால், வேட்பாளர் தேர்வில் பெரியளவில் எதிர்பார்ப்பு இருக்காது. ஆனால், தற்போது வேட்பாளருக்கு பொருளாதார பலம், கட்சியில், மக்களிடம் தனிப்பட்ட செல்வாக்கு இருப்பது அவசியம். தற்போது கட்சிக்கு வெற்றி அவசியமானது. அதனால், பின்புலத்தை ஆராயாமல் வெற்றி பெற வாய்ப்புள்ள நபருக்கே ‘சீட்’ வழங்கினால் மட்டுமே அதிமுக வெற்றிப்பெற முடியும்,’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT