Published : 03 Mar 2019 10:17 AM
Last Updated : 03 Mar 2019 10:17 AM
இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் போட்டியிட வசதியாக பெரம்பலூர் தொகுதியை தேர்வு செய்து, இத் தொகுதியில் அக்கட்சியினர் தொடர் மருத்துவ முகாம்களை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து தாமரை சின்னத்தில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு 2,38,887 வாக்குகள் பெற்று 3-வது இடத்தைப் பிடித்தார். எனவே, மீண்டும் இதே தொகுதியில் போட்டியிட முடிவு செய்து மக்களிடம் ஆதரவு திரட்டும் நோக்கில் இலவச மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறார்.
பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பெரம்ப லூர், லால்குடி, முசிறி, மண்ணச் சநல்லூர், குளித்தலை, துறையூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதி களில் மொத்தம் 65 மருத்துவ முகாம்கள் நடத்த இக்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக சென்னை காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள், உயர் மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்கள், மருத்துவ உதவியாளர்கள் என 40 பேர் கொண்ட குழுவினர் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் கிராமம் கிராமமாக வலம் வருகின்றனர்.
கண், காது, மூக்கு, தொண்டை, தோல், பல், எலும்பு, மகளிர், பொது என 14 பிரிவுகளில் சிறப்பு மருத்துவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து தினமும் ஒரு கிராமத்துக்குச் சென்று மருத்துவ முகாமை நடத்துகின்றனர். காலை 10 மணி முதல் மதியம் 3 மணிவரை நடைபெறும் இம்மருத்துவ முகாம்களுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.
மருத்துவ முகாம் நடைபெறவிருக்கும் கிராமத்துக்கு முன்கூட்டியே இக்கட்சியினர் சென்று ஆட்டோக்களில் ஒலிபெருக்கிவைத்து அதன் மூலம் விளம்பரம் செய்து ஆட்களை திரட்டுகின்றனர். மருத்துவ ஆலோசனையுடன், மருந்து மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன.
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே ஒன்றரை லட்சம் வாக்காளர்களைச் சந்தித்து சிகிச்சையளித்து ஆதரவு திரட்டத் திட்டமிட்டுள்ளனர்.
கூட்டணியில் போட்டியிட் டாலும், தனித்துப் போட்டியிட் டாலும் இதுபோன்ற இலவச மருத்துவ முகாம்கள் பாரிவேந்த ருக்கு கணிசமான வாக்குகளை சேகரித்துக் கொடுக்கும் என்பது இந்திய ஜனநாயகக் கட்சியினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT