Published : 10 Mar 2019 07:01 AM
Last Updated : 10 Mar 2019 07:01 AM
பழைய வாகனங்கள் உள்ளிட்ட பொருட்களை விற்க, வாங்கப் பயன்படும் வகையில் முப்பரி மாண செல்போன் செயலியை வடிவமைத்து காஞ்சிபுரம் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியின் கணிப்பொறி அறிவியல் பிரிவு மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். இவர்களின் முயற்சிக்கு மத்திய அரசு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கி கவுரவித்துள்ளது.
‘ஸ்மார்ட் இந்தியா’ திட்டத்தின் கீழ் மத்திய அரசு அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரு கிறது. இந்தத் திட்டத்தில் மாணவர்கள் மத்தி யில் ஆர்வத்தை உருவாக்க ‘ஸ்மார்ட் இந்தியா ஹாக்கத்தான்’ என்ற போட்டிகளை மத்திய அரசு நடத்தி வருகிறது.
கோயம்புத்தூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் காஞ்சிபுரம் அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரி மாணவர்கள் 6 பேர் பங்கேற்று ஒரு செல்போன் செயலியை வடிவமைத்தனர்.
புதிய இருசக்கர வாகனங்கள், கார்களின் வருகை அதிகரிக்க, அதிகரிக்க பழைய வாகனங்களின் தேக்கம் அதிகமாகியுள்ளது. அதேநேரத்தில் பழைய வாகனங்களைக் குறைந்த விலைக்கு வாங்கி பயன்படுத்து பவர்களும் அதிகமாக உள்ளனர்.
எனவே இதுபோன்று பழைய பொருட் களை விற்க, வாங்க இடைத்தரகர் இல்லாமல் பொதுமக்கள், தங்களுக்குள் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் வகையிலான மாதிரி செல்போன் செயலி ஒன்றை மாணவர்கள் வடிவமைத்தனர். இந்த செயலி மூலம் தன் னிடம் உள்ள பழைய வாகனத்தை விற்க விரும்பும் நபர், முப்பரிமாண உருவத்தில் அந்த வாகனத்தை இந்த செயலியில் பதி வேற்ற முடியும்.
அதைப் பார்த்து, தேவைப்பட்டால் வாங்குபவர் அவரை தொடர்பு கொள்ள முடியும். ஏலம் அடிப்படையில் வாகனத்தை விற்கும் வகையிலான வசதிகளும் இந்த செயலியில் உள்ளன.
கால் டாக்ஸி நிறுவனங்கள் தற்போது காரைப் பயன்படுத்துபவர்களை ஷேரிங் முறையில் கூட அழைத்துச் செல்கின்றன. ஒரு குறிப்பிட்ட நிறுவனங்கள் மட்டுமல்லாது, அனைத்து கார் ஓட்டுநர்களும், பொதுமக் களும் பதிவு செய்து ஷேரிங் முறையில் பயன்படுத்துவதற்கான வசதியும் இந்த செயலியில் உள்ளது. மாணவர்கள் வடி வமைத்த இந்த செயலிக்கு, மத்திய அரசு ரூ.1 லட்சம் பரிசு வழங்கி கவுரவித்துள்ளது.
இதுகுறித்து முப்பரிமாண செயலியை வடிவமைத்த மாணவர்கள் குழுவின் தலைவர் பி.ஆகாஷ் கூறியதாவது:
எங்கள் கல்லூரியில் கணிப்பொறி அறிவியல் படிக்கும் கே.தினேஷ்குமார், என்.ஜனார்த்தனன், எஸ்.கார்த்திகேயன், ஜி.ஆர்.அக் ஷயா, ஜெ.உஷா ஆகியோர் இணைந்து இந்த செயலியை வடிவமைத் தோம். தற்போது சோதனை முறையில் தான் இந்தச் செயலியை வடிவமைத்துள் ளோம். இதனை மேலும் மெருகேற்ற வேண்டி யுள்ளது. போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துதல், தேவையற்ற முறையில் தேங்கி மட்கும் பழைய வாகனங்களைத் தேவையானவர்கள் வாங்குதல், விற்பனை செய்தல் ஆகியவற்றை எளிதாக்கும் வகையில் இதனை வடிவமைத்தோம்.
பழைய வாகனங்களை வாங்கும் விற்கும் செயலிகள் இருந்தாலும் முப்பரிமாண வடிவத்தில் வாகனங்களை பார்க்கும் வசதி, வாகனங்களை வாங்குபவர்கள் ஷேரிங் முறையில் தாங்கள் செல்லும் பகுதிக்கு வேறு சிலரையும் அழைத்துச் செல்வதற்கு பதிவு செய்யும் வசதியும் இதில் உள்ளது. இந்தச் செயலியை, வரும் காலத்தில் பொதுமக்களின் தேவைகளுக்கு ஏற்பவும், அவர்களுக்கு மேலும் பயனுள்ள வகையிலும் மேம்படுத்தி வழங்க உள்ளோம்.
இவ்வாறு ஆகாஷ் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT