Published : 11 Apr 2014 12:17 PM
Last Updated : 11 Apr 2014 12:17 PM

ஆதார் அட்டைகள் விநியோகிக்க முடியாமல் தபால் ஊழியர்கள் திணறல்

ஆதார் அட்டைகள் அனைத்தும் தபால் மூலம் அனுப்பப்படுவதால், அவற்றை குறித்த நேரத்தில் விநியோகிக்க முடியாமல் தபால் ஊழியர்கள் திணறி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 80 சதவீத மக்களுக்கு ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுத் தல், விவரங்கள் சேகரித்தல் போன்ற பணிகள் முடிவடைந் ததையடுத்து, அவர்களுக்கு ஆதார் அட்டைகள் தற்போது அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப் படுகின்றன. ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான அட்டைகள் தபால் துறை மூலம் அனுப்பப் படுவதால், அவற்றை விநியோ கிக்க முடியாமல் ஊழியர்கள் திணறுகின்றனர்.

இதுகுறித்து, ஆவடியில் உள்ள தபால் நிலைய ஊழி யர் ஒருவர் கூறுகையில், நாள் தோறும் வழக்கமாக வரும் தபால்களை பட்டுவாடா செய் வதற்கே சிரமமாக உள்ளது. இந்நிலையில், ஆதார் அட்டை கள் ஒரே சமயத்தில் ஆயிரக் கணக்கில் வருவதால் அவற்றை பட்டுவாடா செய்ய முடியாமல் சிரமப்படுகிறோம். இதனால், விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமைகளில் கூட வந்து அவற்றை பட்டுவாடா செய்ய வேண்டி நிலை உள்ளது” என்றார்.

இதுகுறித்து, தமிழ்நாடு நுகர்வோர் மைய ஒருங்கிணைப்பாளர் சடகோபன் கூறுகையில்,

“நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப் பட்டுள்ள 11 ஆவணங்களில் ஆதார் அட்டையும் உள்ளது. சிலர் இந்த அட்டை தேர்தலுக்கு முன்பாக கிடைத்துவிடும். அதைக் காண்பித்து, வரும் தேர்தலில் வாக்களிக்கலாம் என கருதி இருந்தனர். இந்நிலையில், அவர்களுக்கு தேர்தலுக்கு முன்பாக ஆதார் அட்டை கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, இந்த அட்டைகளை தபால் மட்டுமின்றி, தனியார் கொரியர் நிறுவனங்கள் மூலம் விரைவாக கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x