Published : 17 Mar 2019 12:09 PM
Last Updated : 17 Mar 2019 12:09 PM
சட்டபேரவை தொகுதி இடைத்தேர்தல் பணி தொடர்பாக அதிமுக தலைமையின் புதிய உத்தரவால் கூட்டணி கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலுடன், 18 சட்டப்பேரவைத் தொகுதி களுக்கான இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. இதில் குறைந்தது 6 தொகுதிகளில் வெற்றிபெற்றால் மட்டுமே ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலையில் அதிமுக உள்ளது. அதே நேரம், அனைத்து தொகுதிகளிலும் அதிமுகவுக்கு தோல்வியை ஏற்படுத்தி ஆட்சியை கவிழ்க்க திமுகவும், அமமுகவும் மும்முரமாக பணியாற்றி வருகின்றன.
இந்நிலையில், மொத்தமுள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் 20 இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக விட்டுக் கொடுத்துள்ளது. அதிமுக போட்டியிடாத அந்த 20 தொகுதிகளைச் சேர்ந்த கட்சி நிர்வாகி களுக்கு புதிய உத்தரவை தலைமை பிறப்பித்துள்ளதாம். அதன்படி கூட்டணி கட்சிகள் போட்டியிடும் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து அதிமுக நிர்வாகிகளும் இடைத்தேர்தல் நடக்கும் தொகுதியிலேயே தங்கி தேர்தல் பணியை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக் கப்பட்டுள்ளது.
கூட்டணி கட்சிகள், தேர்தல் பணிக்கு அதிமு கவையே முழுமையாக நம்பியுள்ளன. அதிமுகவினர் இடைத்தேர்தல் பணிகளை கவனிக்க சென்றால் மக்களவைத் தேர்தலுக்கு யார் வேலை செய்வது என தெரியாமல் கூட்டணி கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து அதிமுக நிர்வாகி ஒருவர் கூறியதாவது: கடந்த காலங்களில் இடைத் தேர்தல்கள் தனியாக நடந்ததால் அமைச் சர்கள் தலைமையில் தேர்தல் பணிகளை சிறப்பாக செய்ய முடிந்தது. தற்போது மக்களவைத் தேர்தலுடன் சேர்ந்து நடப்பதால், இடைத்தேர்தல் பணிகளில் முழுமையாக கவனம் செலுத்து வது சிரமம்.
வீடு,வீடாகச் செல்வதற்கே அதிக அளவில்ஆட்கள் தேவைப்படும். அதற்காக தான் பக்கத்து சட்டப்பேரவைத் தொகுதி நிர்வாகிகளையும் இடைத் தேர்தல் பணியில் ஈடுபடுத்த கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது. எங்களுக்கு இடைத்தேர்தல் வெற்றிதான் மிகவும் முக்கியம். ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் முடிவுபோல் ஆகிவிடக் கூடாது என்பதில் கவனமாக உள்ளோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT