Published : 26 Mar 2019 08:44 AM
Last Updated : 26 Mar 2019 08:44 AM
காங்கிரஸில் சுதர்சனநாச்சியப் பனுக்கு சீட் கொடுக்காததால், அவரது ஆதரவாளர்கள் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக உள்ளடி வேலை பார்க்கத் தயாராகி வருகின்றனர். இதனால் கார்த்தி சிதம்பரம் தரப்பினர் கலக்கத்தில் உள்ளனர்.
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் 1999 தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சுதர்சனநாச்சியப்பன் தமாகா சார்பில் நின்ற ப.சிதம்பரத்தை வென்றார். கடந்த 2001-ல் அதிமுகவுடன் தமாகா கூட்டணி வைத்ததால், காங்கிரஸ் ஜ னநாயகப் பேரவையை சிதம்பரம் தொடங்கினார். பின்னர் 2004 தேர் தலில் காங்கிரசுடன் இணைந்தார். அப்போதே ப.சிதம்பரத்துக்கு சீட் கொடுக்கக்கூடாது என சுதர்சனநாச்சியப்பன் எதிர்ப்பு தெரிவித்தார். அவரை சமாதானப்ப டுத்தி மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கட்சித் தலைமை கொடு த்தது.
சில ஆண்டுகள் மத்திய இணை அமைச்சர் பதவியும் வகித்தார். இந்த முறை ப.சிதம்பரம் மாநிலங்களவை உறுப்பினராக இருப்பதால், எப்படியும் சீட் வாங்கி விடலாம் என்ற எண்ணத்தில் சுதர்சனநாச்சியப்பன் இருந்தார். ஆனால் கட்சித் தலைமை கார்த்தி சிதம்பரத்துக்கே மீண்டும் சீட் கொடுத்தது. இதனால் அதிருப்தி அடைந்த சுதர்சனநாச்சியப்பன், ப.சிதம்பரத்துக்கு எதிராக குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். மேலும் அவரது ஆரவாளர்கள் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக வேலை பார்க்கவும் தயாராகி வருகின்றனர். இதனால் கார்த்தி சிதம்பரம் தரப்பினர் கலக்கத்தில் உள்ளனர்.
இது குறித்து சுதர்சனநாச் சியப்பன் ஆதரவாளர்கள் கூறு கையில், ஒரு குடும்பத்தில் ஒருவருக்குத்தான் சீட் என, ராகுல் காந்தி கூறி வந்தார். ஆனால் கார்த்தி சிதம்பரத்துக்கு எப்படி சீட் கொடுத்தனர் என்பது தெரியவில்லை. தொடர்ந்து காங் கிரஸ் கட்சியிலேயே இருக்கும் சுதர்சனநாச்சியப்பன் போன்ற மூத் தவர்களை மதிக்காதது வேதனை அளிக்கிறது. சுதர்சனநாச்சியப் பனுக்கு சீட் கொடுக்காதது காங்கிரசுக்கு இழப்புதான். அது தேர்தலில் எதிரொலிக்கும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT