Published : 09 Sep 2014 10:45 AM
Last Updated : 09 Sep 2014 10:45 AM

தண்டவாளத்தில் சிக்கிய பள்ளி வேன்: விபத்தைத் தவிர்த்த ரயில் ஓட்டுநர் கவுரவிப்பு

தண்டவாளத்தில் பள்ளி மாணவர் களுடன் சிக்கிய வேன் மீது மோதாமல் சாதுர்யமாக செயல் பட்டு விபத்தை தவிர்த்த ரயில் ஓட்டுநரை கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் நேரில் அழைத்து பாராட்டினார்.

காரைக்காலில் இருந்து பெங்களூர் செல்லும் பயணிகள் ரயில் ஆகஸ்ட் 25ம் தேதி கடலூர் துறைமுகம் சந்திப்பிலிருந்து, விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்போது கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே கன்னித்தமிழ்நாடு-பெத்தநாயக் கன்குப்பம் இடையே உள்ள ஆளில்லாத ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் எதிர்பாராதவிதமாக தண்ட வாளத்தின் குறுக்கே சிக்கிக் கொண்டது. இதை 300 மீட்டர் தொலைவிற்கு முன்னரே கவனித்த ரயில் ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டு ரயிலை வேன் நின்ற இடத்துக்கு 10 மீட்டர் முன்னரே நிறுத்தினார். இதனால் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதையடுத்து கடலூர் துறைமுகம் ரயில்வே போலீ ஸாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டு, அந்த வேன் அப்புறப்படுத்தப் பட்டது. பின்னர் ரயில் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றது. பின்னர் வேன் ஓட்டுநரான ராஜ்குமாரை கைதுசெய்த ரயில்வே போலீஸார் பள்ளி வேனையும் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் விபத்தைத் தவிர்க்கும் விதமாக சாமர்த்தி யமாக செயல்பட்ட ரயில் ஓட்டுநரான விருத்தாசலத்தை சேர்ந்த எம்.குலாம் தஸ்தகீர்(54), உதவி ஓட்டுநர் கடலூர் திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்த எஸ்.பாலாஜி(25) ஆகி யோரை மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் திங்கள்கிழமை நேரில் அழைத்து பாராட்டினார். அப்போது ஆட்சியரிடம் மனு அளிக்க கூடியிருந்த பொதுமக் களும் ரயில் ஓட்டுநர்களை பாராட் டினர்.

இதுகுறித்து ரயில் ஓட்டுநர் குலாம் தஸ்தகீரிடம் கேட்டபோது, ரயில் பாதையில் வேன் நிற்கும் போது, உள்ளே பள்ளி குழந்தைகள் இருக்கிறார்களா என்று அறியமுடியவில்லை. வேன் மீது ரயில் மோதி விடக்கூடாது என்பதே எங்கள் இருவருடைய நோக்கமாக இருந்தது.

70 கிலோமீட்டர் வேத்தில் சென்ற ரயிலை 300 மீட்டருக்குள் நிறுத்துவது என்பது சிரமம் என்றபோதிலும், அவசரகால பிரேக்கை பயன்படுத்தி நிறுத்த முயற்சி செய்தோம்.

இந்த முயற்சியின் பலனாக வேனுக்கு 10 மீட்டர் முன்னால் ரயில் நின்றது. அப்போதுதான் வேனுக்குள் பள்ளிக்குழந்தைகள் இருந்தது தெரியவந்தது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x