Published : 15 Mar 2019 02:30 PM
Last Updated : 15 Mar 2019 02:30 PM

காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிகே, மதிமுக வேட்பாளர்கள் யார்?- உத்தேசப்பட்டியல்

திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணிக்கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரம் உத்தேசப்பட்டியல் வேட்பாளர்கள் விபரங்கள் கட்சியினர் வட்டாரத்தில் வந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளுக்கான தொகுதிகளை ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி காங்கிரஸ் 1.திருவள்ளூர், 2.அரக்கோணம், 3.ஆரணி, 4.திருச்சி, 5.சிவகங்கை, 6.தேனி, 7.விருதுநகர், 8. திண்டுக்கல், 9.கன்னியாகுமரி மற்றும் 10.புதுச்சேரி மதிமுக - 1. ஈரோடு, விசிக - 1. சிதம்பரம் மற்றும் 2.விழுப்புரம்

 

மார்க்சிஸ்ட் கோவை, மதுரை, இந்திய கம்யூனிஸ்ட் திருப்பூர் மற்றும் நாகை, ஐஜேகே - 1. பெரம்பலூர், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி-  1. நாமக்கல், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 1. ராமநாதபுரம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.

 

இதில் மதிமுக சார்பில் மாநிலங்களவைக்கு வைகோவும், ஈரோடு தொகுதியில் கணேச மூர்த்தியும் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் சிதம்பரத்தில் திருமாவளவனும், விழுப்புரத்தில் ரவிக்குமாரும் போட்டியிட உள்ளனர்.

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 1. மதுரையில் சு.வெங்கடேசன் 2. கோவையில்- பி.ஆர்.நடராஜன் ஆகியோர் போட்டியிட உள்ளனர்.

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் 1. நாகையில் செல்வராஜும் 2. திருப்பூரில் சுப்பராயனும் போட்டியிட உள்ளனர்.

 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில்  ராமநாதபுரத்தில் நவாஸ் கனி போட்டியிடுகிறார்.

 

ஐஜேகே சார்பில் பெரம்பலூரில் பாரிவேந்தரும் போட்டியிடுகின்றார்.

 

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி சார்பில் நாமக்கல் தொகுதியில் ஈஸ்வரன் போட்டியிடுகிறார்.

 

காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் உத்தேசப்பட்டியல்:

 

காங்கிரஸ் கட்சி தொகுதி வேட்பாளர்கள் 1. .திருவள்ளூர் – செல்வப்பெருந்தகை அல்லது விக்டரி ஜெயக்குமார் 2. சிவகங்கை -கார்த்தி சிதம்பரம் அல்லது ஸ்ரீநிதி 3. விருதுநகர் - மாணிக் தாகூர் 4. தேனி - ஜே.எம்.ஆரூண் 5. திருச்சி – திருநாவுக்கரசர் அல்லது லூயிஸ் (அடைக்கலராஜ் மகன்) 6. கரூர் - ஜோதிமணி 7. கிருஷ்ணகிரி - டாக்டர் செல்லக்குமார் 8. ஆரணி - நாசே.ராமச்சந்திரன் 9. கன்னியாகுமரி - ராபர்ட் புரூஸ் அல்லது வசந்த குமார். (பொன் ராதாகிருஷ்ணனை வெல்வதற்காக அனைத்து விதிகளையும் வசந்த குமாருக்காக திருத்த உள்ளதாக தகவல்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x