Published : 17 Mar 2019 10:35 AM
Last Updated : 17 Mar 2019 10:35 AM
வரும் நாடாளுமன்றத் தேர்தலுடன் 18 தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தலும் நடக்கிறது. இதில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 9 வேட்பாளர்கள் மீண்டும் களத்தில் இறங்குகிறார்கள். முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் வெளியிட்டார்.
தமிழகத்தில், வரும் ஏப்ரல் 18ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலுடன் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடக்கிறது. இதில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார்.
இதில் முதற்கட்டமாக, 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்தார் தினகரன். இதில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களே மீண்டும் களத்தில் இறங்குகின்றனர்.
பூந்தமல்லி - ஏழுமலை,
பெரம்பூர் - வெற்றிவேல்,
திருப்போரூர் - கோதண்டபாணி,
குடியாத்தம் - ஜெயந்தி பத்மநாபன்,
மானாமதுரை - மாரியப்பன் கென்னடி,
சாத்தூர் - சுப்ரமணியன்,
அரூர் - முருகன்,
பரமக்குடி - முத்தையா,
ஆம்பூர் - பாலசுப்ரமணியன்
ஆகியோர் சட்டசபைத் தொகுதிக்கான வேட்பாளர்களாக களம் இறங்குகின்றனர் என அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT