Published : 14 Mar 2019 04:31 PM
Last Updated : 14 Mar 2019 04:31 PM
பருவநிலை மாற்றத்தால் கோடையின் தாக்கம் பிப்ரவரியிலேயே தெரிய ஆரம்பித்துவிட்டது. நிலத்தடி நீர் சுருங்கியதன் விளைவு, பெரு நகரங்கள் மட்டுமல்லாது கிராமங்களிலும் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
மாற்றம் நம்மில் இருந்து தொடங்கவேண்டும் என்பதற்கு ஏற்ப, வீட்டில் நாம் பயன்படுத்தும் தண்ணீரை எளிய வழிகளில் மிச்சப்படுத்தலாம். எப்படி?
1. குளியலறையில் ஷவரைப் பயன்படுத்திக் குளிப்பதைத் தவிர்க்கலாம்.
2. குளிக்கும்போது குவளை (Mug) முழுக்க நீரை எடுத்துப் பயன்படுத்தாமல், முக்கால்வாசி அளவுக்கு தண்ணீரை எடுத்துப் பயன்படுத்தலாம்.
3.இந்திய மற்றும் மேற்கத்திய (Western) டாய்லெட்டுகள் இரண்டும் இருக்கும்பட்சத்தில் இந்திய டாய்லெட்டைப் பயன்படுத்தலாம், உடலுக்கும் நல்லது. தண்ணீரும் குறைவாகவே தேவைப்படும்.
4.வெஸ்டர்ன் டாய்லெட் மட்டுமே இருக்கும் வீடுகளில் தண்ணீர் வெளியாகும் லெவலை (Flush) குறைத்துப் பயன்படுத்தலாம்.
5.பல் துலக்கும்போதும், ஆண்கள் ஷேவ் செய்யும்போதும் வாஷ் பேசினில் தண்ணீரைத் திறந்துவிட்டுக் கொண்டே செய்வதைத் தவிர்க்கலாம்.
6.சமையலறையில் நேரமிருக்கும்போது பைப்பைப் பயன்படுத்தாமல், தண்ணீர் பிடித்துவைத்துப் பாத்திரங்களைக் கழுவலாம்.
7.வீட்டில் தண்ணீர் ஃபில்டர் வைத்திருப்போர் அதில் வெளியாகும் நீரைப் பிடித்து, பாத்திரம் கழுவவோ, கழிவறையிலோ பயன்படுத்தலாம்.
8.வாஷிங் மெஷினைத் தினசரி பயன்படுத்தாமல், முழுமையாகத் துணிகளை நிரப்பிய (Full Load) பின்னர் பயன்படுத்தலாம். இதன்மூலம் மின்சாரமும் குறைவாக செலவாகும்.
9.வீட்டைச் சுற்றிலும் செடிகளை வைத்திருப்போர் அரிசி, பருப்பு களைந்த தண்ணீரை வீணாக்காமல், செடிகளுக்கு ஊற்றலாம்.
10.மழைக்காலங்களில் வாய்ப்பு உள்ளவர்கள் மழை நீரைப் பிடித்துவைத்துப் பின்னர் பயன்படுத்தலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT