Published : 17 Mar 2019 09:49 AM
Last Updated : 17 Mar 2019 09:49 AM
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், ஏற்கெனவே மாநிலங் களவை உறுப்பினராக இருப்ப தால், அவரது குடும்பத்தைச் சேர்ந்த வருக்கு மக்களவைத் தொகுதியில் சீட் தரவே கூடாது என முன்னாள் மத்திய இணை அமைச்சர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் போர்க்கொடி தூக்கி உள்ளார்.
சிவகங்கை தொகுதியில் ப.சிதம் பரம் பலமுறை போட்டியிட்டு வெற்றி பெற்றதால், இத்தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது.
கடந்த 2014-ல் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டதால், தோல்வி பயத் தில் ப.சிதம்பரம் சிவகங்கையில் போட்டியிடாமல் தனது மகன் கார்த்தி சிதம்பரத்தை களமிறக்கி னார். ஆனால் அவர் தோல்வி அடைந்தார்.
தற்போது ப.சிதம்பரம் மாநிலங்க ளவை எம்.பி.யாக இருக்கிறார். இதனால் தனது மகனை மீண்டும் நிறுத்தப்போவதாக தகவல்கள் வருகின்றன.
திமுக கூட்டணியில் காங்கிர ஸுக்கு சிவகங்கை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதால், அக்கட்சியி னர் உற்சாகமாக தேர்தல் பணியைத் தொடங்கிவிட்டனர். சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் சிலர் திமுக முக்கிய பிரமுகர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இந்நிலையில், கார்த்தி சிதம் பரத்துக்கு சீட் தருவதற்கு, காங்கிர ஸின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக அக்கட்சியினர் கூறுகின்றனர்.
ஏற்கெனவே ப.சிதம்பரம் மாநி லங்களவை உறுப்பினராக இருக் கும் நிலையில், அவரது குடும் பத்தைச் சேர்ந்தவருக்கு சிவகங்கை சீட் தரக் கூடாது என சுதர்சன நாச்சியப்பன் கட்சித் தலைமையிடம் போர்க்கொடி தூக்கி உள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
ப.சிதம்பரம் தமாகாவுக்குச் சென்றபோது சுதர்சன நாச்சியப்பன் காங்கிரஸ் சார்பில் நின்று சிவ கங்கையில் வெற்றிபெற்றார். மீண் டும் ப.சிதம்பரம் காங்கிரஸில் சேர்ந்த தால், சுதர்சன நாச்சியப்பனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தரப்பட்டது. அவர் மத்திய இணை அமைச்சராகவும் இருந்துள்ளார்.
சிதம்பரம் போட்ட முட்டுக்கட்டை
பதவிக் காலம் முடிந்த நிலையில் அவருக்கு மாநிலத் தலைவர் பதவி தரப்போவதாக கூறப்பட்டது. அதற்கு ப.சிதம்பரம் முட்டுக்கட்டை போட்டார்.
இந்நிலையில், தற்போது ப.சிதம் பரம் மாநிலங்களவை எம்.பி.யாக இருப்பதால், தனக்கு சிவகங்கை யில் போட்டியிட வாய்ப்பு தரும்படி சுதர்சன நாச்சியப்பன் டெல்லி தலைமையிடம் கேட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக கட்சி நிர்வாகி கள் பலரும் குரல் கொடுத்துள்ளனர்.
கடந்த தேர்தலில் போட்டியிட்ட போது கார்த்தி சிதம்பரம் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளை கண்டுகொள்ளவில்லை. இதனால் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டு படுதோல்வி அடைந்தார்.
கார்த்தி தரப்பு அதிர்ச்சி
அவர் மீது ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு விசாரணையில் உள்ளது. இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டி சுதர்சன நாச்சியப்பன் சீட் கேட்டு கட்சித் தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். இதனால், கார்த்தி சிதம்பரம் தரப்பினர் அதிர்ச்சியில் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT