Last Updated : 08 Feb, 2019 03:51 PM

 

Published : 08 Feb 2019 03:51 PM
Last Updated : 08 Feb 2019 03:51 PM

தமிழக பட்ஜெட்: தமிழக அரசு எதற்கு செலவு செய்கிறது? - எப்படி வருவாய் ஈட்டுகிறது?

வரும் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓராண்டில் தமிழக அரசுக்கு பல்வேறு வழிகளில் வரும் வருவாய் மற்றும் செய்யும் செலவுகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக சட்டப்பேரவையில் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்த ஆண்டு ஏப்ரலில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தமிழக அரசின் பட்ஜெட்டை முன்கூட்டியே தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இந்த ஆண்டு தேர்தல் என்பதால் மத்திய பட்ஜெட்டை போலவே தமிழக பட்ஜெட்டிலும் மக்களவை கவரும் திட்டங்களும், சலுகைகளும் அறிவிக்கப்படலாம் என எதிபார்ப்பு எழுந்தது. இந்தநிலையில், தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. காலை 10 மணிக்கு பேரவையில் துணை முதல்வரும் நிதி யமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் , வரும் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

பட்ஜெட் அறிவிப்பை வாசிக்கும் முன் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நிதியமைச்சர் ஓபிஎஸ் புகழாரம் சூட்டினார். அவர் பட்ஜெட்டில் அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் வரும் நிதியாண்டில் தமிழக அரசின் செலவு மற்றும் வருவாய் விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:

தமிழக பட்ஜெட் 2019- 2020

வரும் நிதியாண்டில் தமிழக அரசு எதிர்பார்க்கும் வருவாய்

1) மாநில ஜிஎஸ்டி மூலம் கிடைக்கும் வருவாய்: ரூ. 96177.14 கோடி

2) மதுபானங்கள் விற்பனைக்கு விதிக்கப்படும் எக்சைஸ் வரி: ரூ. 7262.33 கோடி

3) பத்திரப்பதிவு மூலம் கிடைக்கும் வருவாய்: ரூ. 13122.81 கோடி

4) வாகனங்கள் விற்பனை, பதிவு மூலம் கிடைக்கும் வருவாய்: ரூ. 6510.70 கோடி

5) மத்திய அரசு வசூலிக்கும் வரிகளில் இருந்து தமிழகத்துக்கு கிடைக்கும் பங்கு: ரூ. 30638.87 கோடி

6) தமிழகத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களுக்கும் மத்திய அரசின் பங்குத் தொகை: ரூ. 25602.74 கோடி

-----

தமிழக அரசு எதற்கு செலவு செய்கிறது என்ற விவரங்களும் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.

தமிழக அரசின் முக்கிய செலவுகள்:

அனைத்து வகையான மானியங்களுக்கும் செலவு செய்யும் தொகை: ரூ. 82673.32 கோடி

அரசு ஊழியர்களின் சம்பளத்துக்கு செலவு செய்யும் தொகை: ரூ. 55399.74

அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்துக்காக செலவு செய்யும் தொகை: ரூ. 29627.11 கோடி

வாங்கிய கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டித் தொகை: ரூ. 33226.27 கோடி

அரசு நிறுவனங்கள் பராமரிப்புச் செலவு: ரூ. 11083.42 கோடி

 

மொத்த வரவும் செலவும்

தமிழக அரசின் மொத்த வருவாய்: ரூ. 197721.17 கோடி

தமிழக அரசின் மொத்த செலவு: ரூ. 212035.93 கோடி

பற்றாக்குறை: ரூ. 14314.76 கோடி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x