Published : 26 Feb 2019 10:18 AM
Last Updated : 26 Feb 2019 10:18 AM

பீர்க்கன்காரணை ஏரியில் விரைவில் படகு சவாரி தொடக்கம்; ரூ. 9.81 கோடியில் பணிகள் நடப்பதாக அதிகாரிகள் தகவல்

பீர்க்கன்காரணையில் பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான 120 ஏக்கரில் ஏரி உள்ளது. இதில் பீர்க்கன்காரணை, பெருங்களத் தூர், வண்டலூர் மலை ஆகிய பகுதி களில் இருந்து வெளியேறும் மழை நீர் சேகரிக்கப்படுகிறது.

இதில், 20 ஆண்டுகளுக்கு முன் ஏரியின் கரைகளை ஆக்கிரமித்து, சிறிது சிறிதாக பலர் குடியேறினர். நாளடைவில், ஏரியின் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு, தற்போது ஏரி மூன்றில் ஒரு பங்காக சுருங்கிவிட் டது. இதனால், மழைநீர் தேங்க வழியின்றி, வெள்ளத்தில் சிக்கி, பீர்க்கன்காரணை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளா கின்றனர்.

இந்த ஏரியில் தேக்கி வைக்கும் நீரைக் கொண்டு ஒரு காலத்தில் குடி நீர் மற்றும் பாசனத் தேவை பூர்த்தி யானது. ஆனால், நாளடைவில் ஏரி முறையாக பராமரிக்கப்படாமல் போனதால் குப்பை, கழிவுகள் கொட்டும் இடமானது. இதனால், ஏரியின் தண்ணீரை பயன் படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

ஏரியைப் பாதுகாக்க படகு குழாம் கொண்டு வர வேண்டும் என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது.

இந்நிலையில், பொதுப்பணித் துறை சார்பில், ஜப்பான் நிதி உதவி திட்டத்தின் கீழ், ரூ. 9 கோடியே 81 லட்சம் மதிப்பில் தற்போது சீரமைப் புப் பணி நடைபெற்று வருகிறது. ஏரியை மழைநீர் தேக்கி வைக்கும் திறன் கொண்டதாக புனரமைக்கும் பணி நடப்பதால், சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தை நிரந்தரமாகப் பாதுகாக்க ஏதுவாக அமையும்.

மேலும் ஏரியின் கரையோரங் களில் நூற்றுக்கணக்கான அழகிய செடிகள், அரியவகை மரக்கன்று கள் நடப்பட்டு வளர்க்கப்பட உள் ளன. குறிப்பாக அனைத்து பணிக ளும் முடிந்ததும் ஏரியில் படகு சவாரி வசதி அமைக்கப்பட உள்ளது. அதே போல் ஏரியைச் சுற்றி நடை பயிற்சிக்காக நடைபாதையும் உருவாக்கப்பட உள்ளது.

இதுகுறித்து பொதுப்பணி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஆக்கிரமிப்பு இடம் போக மீதி உள்ள இடத்தில் ஏரி சீரமைப்புப் பணி நடக்கிறது. ஜப்பான் நிதி உதவியுடன் ரூ.9.81 கோடியில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு, நடைபாதை, பூங்கா, படகு சவாரி போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

ஏரியைச் சுற்றிலும் நடைபயிற்சி செல்ல தளம் அமைக்கப்படுகிறது. மேலும் வாகன நிறுத்துமிடம், பன் னோக்கு புல்வெளி, திறந்தவெளி திரையரங்குகள், ஆவின் பார்லர் கள், பொதுமக்கள் ஏரி கரைகளில் அமரும் வகையில் இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன.

ஏரிக்குள் பறவைகள் தங்க மரங்கள் நடும் பணி மேற் கொள்ளப்படுகிறது. வேலி, சுற்றுச் சுவர் அமைக்கும் பணிகள் நடை பெறுகிறது.

இந்தப் பணிகளை ஓராண்டுக் குள் முடிக்கவும் தீர்மானிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x