Last Updated : 03 Feb, 2019 09:43 AM

 

Published : 03 Feb 2019 09:43 AM
Last Updated : 03 Feb 2019 09:43 AM

கஜா புயல், வறட்சியால் நிலைகுலைந்த விவசாயிகளின் அடுத்த வேதனை; பல மாவட்டத்தில் தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல்

வெள்ளை ஈ தாக்குதலால் தென்னை மகசூல் பாதியாகக் குறைந்துவிட்டது. மேலும் வரத்து குறைவால் சென்னையில் இளநீர் விலை 50 ரூபாயைத் தொட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தென்னை விவ சாயம் அண்மையில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் தாக்குதலால் 12 மாவட்டங்களில் 60 லட்சம் தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்துவிட்டன. இந்தஆண்டு தென்மேற்கு பருவமழை யும் வடகிழக்கு பருவமழையும் போதிய அளவு பெய்யவில்லை. அதன் காரணமாகவும் தென்னை மகசூல் பாதித்துள்ளது. இதையெல் லாம் விட வெள்ளை ஈ தாக்குதல் தென்னை விவசாயத்தை நிலை குலையச் செய்துள்ளது.

இதுகுறித்து தென்னிந்திய தென்னை சாகுபடியாளர்கள் சங்கத் தலைவர் டி.ஏ.கிருஷ்ணசாமி கூறும் போது, "பொள்ளாச்சி, உடுமலைப் பேட்டை பகுதிகளில் உள்ள தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்குதல் அதிகமாக உள்ளது. கேரளாவில் இருந்து வந்த இந்த நோய் தாக்குதல், திருப்பூர், ஈரோடு, கடலூர், நாகை மாவட்டங்களுக்கும் பரவிவிட்டது. வெள்ளை ஈ தாக்கு தலைக் கட்டுப்படுத்த வேளாண் மைத் துறையும் விவசாய பல்கலைக் கழகமும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இருப் பினும், வெள்ளை ஈ தாக்குதல் குறைந்தபாடில்லை.

பொள்ளாச்சி, உடுமலைப் பகுதி களில் மட்டும் சுமார் 1 கோடி தென்னை மரங்களும் ஈரோடு பகுதியில் 20 லட்சம் மரங்களும் உள்ளன. இவற்றில் பெரும்பாலான மரங்களில் வெள்ளை ஈ தாக்குதல் இருக்கிறது. இதனால் ஆண்டுக்கு 100 காய்கள் கிடைத்த மரத்தில் இப்போது 20 காய்களே கிடைக் கின்றன. 200 காய்கள் வரை கிடைத்த கலப்பின மரத்தில், இப்போது 150 வரை மட்டுமே கிடைக்கின்றன. மகசூல் பாதியாகக் குறைந்து கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளோம். இதனால், கோடை காலம் தொடங்கும் முன்பே ஒரு காய் ரூ.20 வரை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது" என்றார். இதனால் கோடை காலத்தில் ரூ.50 வரைக்கும் இளநீர் விற்பனை இருக்கும் என வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு செயலாளர் செ.நல்ல சாமி கூறும்போது, “வெள்ளை ஈ பச்சையத்தை இல்லாமல் செய்வதால் ஒளிச்சேர்க்கை நடைபெறாமல் மகசூல் பாதித் துள்ளது. ஒரு தென்னை மரத்தில் இருந்து 3 லிட்டர் நீரா பானம் கிடைத்த நிலையில் இப்போது ஒன்றரை லிட்டர் நீரா பானம் மட்டுமே கிடைக்கிறது” என்றார்.

இதுகுறித்து வேளாண் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “வெள்ளை ஈ தாக்குதல் கடந்த ஆண்டு அளவுக்கு இந்த ஆண்டு இல்லை. இதனால் விவசாயி களுக்கு பெருமளவு பொருளாதார இழப்பு ஏற்படவில்லை. வெள்ளை ஈ தாக்குதல் குறித்து தகவல் சேகரித்து வருகிறோம். விரைவில் இதன் முழுவிவரம் தெரியவரும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x