Published : 07 Feb 2019 09:25 AM
Last Updated : 07 Feb 2019 09:25 AM
தென்னையைத் தாக்கும் சுருள் வெள்ளை ஈக்களை செலவில்லா மல் இயற்கை முறையில் முற்றிலு மாகக் கட்டுப்படுத்தலாம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.
அமெரிக்காவில் தோன்றிய சுருள் வெள்ளை ஈக்கள், இந்தியா விலும் பரவின. குறிப்பாக கேரளா வில் இருந்து பொள்ளாச்சி, திருப் பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங் களில் தென்னை சாகுபடி கடுமை யாக பாதிக்கப்பட்டது. கலப்பின மரங்களான சவுகாட் ஆரஞ்சு குட்டை, மலேசியன் மஞ்சள் குட்டை, கென்தாளி குட்டை, மலே சியன் பச்சைக் குட்டை ரகங்களை யும் குட்டை நெட்டை வீரிய ஒட்டு ரகங்களையும் அதிகளவில் தாக்கி யிருப்பதும், நாட்டுத் தென்னை மரங் கள் இத்தாக்குதலில் இருந்து தப்பி யுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து திண்டுக்கல் வேளாண் துறை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) பெ.சுருளியப்பன் கூறியதாவது: ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தென்னை ஓலைகளின் சாற்றினை உறிஞ்சி பாதிப்பை ஏற்படுத்துகின்றன. தென்னை மட்டையின் அடிப்பகுதி யில் வெள்ளை ஈக்கள் முட்டை யிடுவதைத் தடுக்க அதில் தண்ணீரைப் பீய்ச்சிடிக்க வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் 30 மில்லி வேப்பெண்ணைய் அல்லது வேம்பு சார்ந்த பூச்சிமருந்து அசாடிராக்டின் 2 மில்லியை கலந்து தென்னை ஓலையின் அடிப்பகுதியில் தெளிக் கலாம்.
மேலும், ஆழியாறில் உள்ள தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் கிரைசோபிட் எனப்படும் இரை விழுங்கி பூச்சிகள் இலவசமாக கிடைக்கின்றன. ஒரு ஏக்கருக்கு 400 பூச்சிகளை விட்டுவிட்டால், அவை சுருள் வெள்ளைப் பூச்சி களை முட்டை பருவத்தில் இருந்தே அழித்தொழிக்கும். இதேபோன்ற இரைவிழுங்கிப் பூச்சிகள் இயற்கை யாகவே உருவாகும். அவை பொறி வண்டுகள் என அழைக்கப்படும். இந்த வண்டுகள் அழியாமல் தடுக்க ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளுக்குப் பதிலாக தண் ணீர், வேப்பெண்ணெய் பயன் படுத்தினால் போதுமானது.
சுருள் வெள்ளை ஈக்களால் இலைகள் கேப்னோடியம் என்ற கரும்பூசணம் ஆவதைத் தடுக்க ஒரு லிட்டர் தண்ணீரில் 25 கிராம் மைதா மாவைக் கலந்து அந்தக் கரைசலை தென்னை ஓலைகளின் மீது தெளித்தால் போதும். அது போல தென்னை மரத்தில் 6 அடி உயரத்தில் விளக்கெண்ணைய் தடவப்பட்ட மஞ்சள் நிற பாலிதீன் பேப்பரை தொங்கவிடுவதன் மூலம் அந்த பேப்பரில் வந்து ஒட்டும் வெள்ளை ஈக்களின் எண்ணிக் கைக் கொண்டு அதற்கேற்ப தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம்.
பயிர் பாதுகாப்பு முறைகள்
தென்னந்தோப்புக்குள் ஆங் காங்கே குண்டு பல்புகள் எரிய விட்டால் பூச்சிகள் அதை நோக்கி வரும். விளக்குகளுக்கு கீழே தண்ணீரும் சற்று மண் ணெண்ணெயும் கலந்த பாத்தி ரத்தை வைத்தால், அதில் விழும் பூச்சிகள் இறந்துவிடும். இதுபோல ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் மூலம் வெள்ளை ஈக்களை இயற்கையாக முற்றிலுமாக ஒழிக்க முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT