Published : 26 Feb 2019 10:04 AM
Last Updated : 26 Feb 2019 10:04 AM
இந்தியாவில் 100 சதவீதப் பெண் களும் நாப்கின் பயன்படுத்தும் வரை எங்களது பணியைத் தொடர்வோம் என்று மலிவு விலை நாப்கின் தயாரிப்பு இயந்திரத்தைக் உருவாக்கிய கோவை முரு கானந்தம் தெரிவித்தார்.
சிறந்த ஆவணப்படத்துக்கான ஆஸ்கர் விருதை, இந்தியாவின் `பீரியட் - எண்ட் ஆஃப் சென்டன்ஸ்' வென்றுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில், பின்தங்கிய கிரா மத்தைச் சேர்ந்த பெண்கள், மாத விடாயின்போது சந்திக்கும் பிரச் சினைகள், எளிய விலை நாப்கின் களை தயாரிக்கும் இயந்திரத்தின் பயன்பாடு, சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை மையப்படுத்தி எடுக்கப்பட்டது இந்த ஆவணப் படம். இந்த இயந்திரத்தை உரு வாக்கிய கோவை ஏ.முருகானந் தம், அவரது கருத்தையும் இந்த ஆவணப்படத்தில் பதிவு செய் திருந்தார்.
இந்தப் படத்தை இந்தியாவை சேர்ந்த குனீத் மோங்கா என்ற பெண் தயாரித்திருந்தார். ராய்க்கா ஸெட்டாப்ச்சி (25) இயக்கியிருந் தார். இவர், ஈரான் வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கப் பெண்.
`பேட் மேன்` திரைப்படம்
கோவை பி.என்.புதூரில் உள்ள தனது வீட்டில், பாராட்டுகள், தொலைக்காட்சி பேட்டிகள் என பரபரப்பாக இருந்த முரு கானந்தம்(57) `இந்து தமிழ்` செய்தியாளரிடம் கூறியதாவது:
9-ம் வகுப்பு வரை படித்த நான், 29-வது வயதில் நாப்கின் தயாரிப்புப் பணியைத் தொடங்கினேன். ஏழரை ஆண்டுகள் ஆய்வுக்குப் பின்னர், 2004-ல் குறைந்த விலையில், எளிய முறையில் நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்தேன். இந்த இயந்திரத்தை மையமாக வைத்து இந்தியில் வெளியான `பேட் மேன்` படம், பெரும் வரவேற்பைப் பெற்றது.
மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் கிடைத்தன.
இந்தியாவில் பல்வேறு மாநிலங் களிலும் இதுவரை 5,300 நாப்கின் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலமாக ஏராளமான பெண்கள் வேலைவாய்ப்புப் பெற் றுள்ளனர். பாகிஸ்தான், வங்காள தேசம் உள்ளிட்ட 24 நாடுகளில் எனது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட நாப்கின் இயந் திரங்கள் பயன்பாட்டில் உள் ளன. ஆப்கானிஸ்தானிலும் இயந் திரத்தை நிறுவ முயற்சித்து வருகிறோம்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாப் பூர் பகுதி மிகவும் பின்தங்கியப் பகுதி. எவ்வித சுதந்திரமும் இல்லாமல், வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் பெண்களிடையே மாத விடாய் சுகாதாரம் தொடர்பான எந்த விழிப்புணர்வும் இல்லை. இதையடுத்து, 2017-ல் அங்கு ஒரு இயந்திரத்தை நிறுவி, அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, பயன்படுத்தச் செய்து, அதை ஆவணப்படுத்தினோம்.
அந்தக் கிராமத்தில் நிறுவப் பட்ட இயந்திரத்தில் தினமும் 500 நாப்கின்களைத் தயாரிக்கலாம். தற்போது அந்தக் கிராமத்தில் பெரும்பாலான பெண்கள் நாப்கின் பயன்படுத்துவதுடன், கிராம மக் களிடமும் விழிப்புணர்வை யும் ஏற்படுத்தி வருகின்றனர். அந்த ஆவணப் படத்துக்கு தற்போது ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. தேர்வுக் குழுவில் பெண் நடுவர் இருந்துள்ளார். இதனால், பெண் களின் பிரச்சினைகளைப் பேசும் இந்தப்படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.
பள்ளிக் கல்வியில்...
ஏறத்தாழ 18 ஆண்டுகளுக்கு முன்பு 2 சதவீதமாக இருந்த நாப்கின் பயன்பாடு, தற்போது 34 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 100 சதவீதமாக மாறும் வரை தொடர்ந்து பணிபுரிவோம். இதன் மூலம் 10 லட்சம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஏறத்தாழ 188 நாடுகளில் மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. தற்போது கிடைத்துள்ள ஆஸ்கர் அங்கீகாரம், இன்னும் அதிக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும். இந்தியாவில் 7.20 லட்சம் கிராமங்கள் உள்ளன. இங்கெல்லாம் விழிப்புணர்வு அவசியம்.
அதேசமயம், அரசை மட்டுமே குறைகூறிக் கொண்டிருக்காமல், பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொருவரும் முன் வர வேண்டும். பள்ளிக் கல்வியில் மாதவிடாய் சுகாதாரம் குறித்த பாடத்தைக் கொண்டுவர வேண் டும். நான் கண்டுபிடித்த நாப்கின் தயாரிப்பு இயந்திரம், பராமரிக்க மிகவும் எளிதானது. 99 சதவீதம் பஞ்சுதான் பயன்படுத்தப்படுகிறது. ஆர்கானிக் முறையிலான நாப் கினை, குறைந்த விலையில் வழங்குவது தொடர்பான ஆராய்ச் சியில் தற்போது ஈடுபட்டுள்ளோம். மின்சாரம் இல்லாமல் இயங்கும் இயந்திரத்தை உருவாக்க முயற் சித்து வருகிறேன்.
காதுகேளாத, வாய் பேசாத பெண்கள், நாப்கினை தயாரிக்கும் வகையிலான இயந்திரத்தையும் நான் வடிவமைத்துள்ளேன். சென் னையில் வரும் மார்ச் 8-ம் தேதி இந்த இயந்திரம் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இதன் மூலம் ஒரு இயந்திரத்துக்கு 20 பேர் வேலைவாய்ப்பு பெறு வர். இவ்வாறு முருகானந்தம் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT