Published : 22 Feb 2019 10:34 AM
Last Updated : 22 Feb 2019 10:34 AM
தமிழகத்தின் 2-வது பெரிய அணை யான பவானிசாகர் அணை கட்டப் படுவதற்கு காரணமாக இருந்த கீழ் பவானி அணையின் தந்தை எனப் போற்றப்படும் ஈரோடு ஈஸ்வர னுக்கு, அணைக்கட்டு பகுதியில் நினைவுச் சின்னம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
1946-ல் சென்னை மாகாண சட்டப் பேரவை தேர்தலில் ஈரோடு தொகுதி வேட்பாளராக காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு ஈஸ்வரன் என்பவர் போட்டியின்றி தேர்வானார். அப் போது, சென்னை மாகாண முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பின்போது, ஆந்திர கேசரி எனப்படும் டி.பிரகாசத்துக்கு கூடுதலாக ஒரு வாக்கு தேவைப் பட்டது. அவர் ஆதரவு கேட்டு ஈரோடு ஈஸ்வரனை நாடினார்.
அப்போது, ஈரோடு தொகுதியில் பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்ட டி.பிரகாசம் ஒப்புதல் அளித் தால், அவருக்கு தனது ஆதரவை அளிப்பதாக ஈஸ்வரன் தெரிவித்தார். டி.பிரகாசம் முதல்வரான பின்னர், அணையை கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்காததால், தனது பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்துவிட்டு அவர் ஈரோடு வந்து விட்டார். அவரை கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த ஆங்கிலேயர் மூலமாக சமாதானப்படுத்தி, சென்னைக்கு வரவழைத்த முதல் வர் பிரகாசம், அணை திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தார்.
வாட்டிய வறுமை
ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களின் செழுமைக்கு முக்கிய காரணகர்த்தாவாக இருந்த ஈரோடு ஈஸ்வரன், 1978-ல் ஈரோடு கருங்கல்பாளையத்தில் உணவு, உறைவிடம் இன்றி வறுமையில் வாடி இறந்தார். அவருடைய மகத் தான மக்கள் சேவையை போற்றும் வகையில் அவருக்கு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து முன்னாள் எம்எல்ஏ குட்டப்பாளையம் சிவசேனாபதி சாமிநாதன் கூறியதாவது: பல்வேறு துறைகளில் சாதனை படைத்த தலைவர்களுக்கு தமிழக அரசு நினைவுச் சின்னம் அமைத்து கவுரவிப்பது வரவேற்கத்தக்கது. அதுபோல, ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 2.5 லட்சம் ஏக்கர் பாசன வசதி கிடைத்திட அரும் பாடுபட்ட ஈரோடு ஈஸ்வரனுக்கு, பவானி சாகர் அணைக்கட்டு பகுதியில் நினைவுச் சின்னம் அமைத்து, அவரது வாரிசுகளை கவுரவிக்க வேண்டும். அவருடைய வரலாறு குறித்த நூல் வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் செ.நல்லசாமி கூறியது: கீழ் பவானியில் அணை கட்ட வேண்டும் என்று ஈரோடு ஈஸ்வரன் அரசுக்கு கோரிக்கை விடுத்தபோது, மேட்டுப்பாளையம் அருகே மேல் பவானி கட்ட வேண் டும் என்ற கோரிக்கை வலுவாக இருந்தது. அப்போதைய முதல்வரி டம் போராடி, கீழ் பவானி அணைத் திட்டத்துக்கு ஒப்புதல் பெற்றார் ஈரோடு ஈஸ்வரன். அவரது போராட் டத்தால் வியந்த முதல்வர் பிரகாசம், ‘உங்களுக்கு எத்தனை ஏக்கர் நிலம் உள்ளது?’ என ஈஸ்வரனிடம் கேட்டபோது, ‘எனக்கு 2,07,000 ஏக்கர் நிலம் உள்ளது’ என ஈரோடு ஈஸ்வரன் பதில் அளித்தார். உண்மை யில், அவருக்கோ, அவரது குடும்பத் தினருக்கோ ஒரு சென்ட் நிலம்கூட இல்லை. ஆனால், தொகுதி மக்க ளின் நலனை கருத்தில் கொண்டு அவர் கூறிய பதிலால் நெகிழ்ந்த முதல்வர் டி.பிரகாசம், கீழ்பவானி பாசனத் திட்டத்தை நிறைவேற்றி னார் என்றார்.
மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகி பாய்ந்து வரும் பவானி ஆறு மற்றும் மோயாறு நதிகள் கலக்குமிடத்தில் பவானிசாகர் அணை கட்டப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த கொத்தமங்கலம் கிராமத் தின் அருகே ரூ.10.50 கோடி செலவில் 1948-ல் தொடங்கி 1955 ஆக. 19-ல் தேதி அணை கட்டி முடிக்கப்பட்டது.
காமராஜர் அணையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். அணை, 120 அடி உயரம் கொண்டது. இதில், 32.8 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT