Published : 02 Feb 2019 01:05 PM
Last Updated : 02 Feb 2019 01:05 PM

இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக உடுமலை கவுசல்யா மத்திய அரசுப் பணியிலிருந்து சஸ்பெண்ட்

இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக உடுமலை கவுசல்யா குன்னூர் வெலிங்டன் கண்டோன்மென்ட் வாரியத்தில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குமரலிங்கத்தைச் சேர்ந்த சங்கர் - கவுசல்யா கடந்த 2015 ஆம் ஆண்டு சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டனர். இதையடுத்து சங்கர் உடுமலை நகரில் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். காயங்களுடன் கவுசல்யா உயிர் தப்பினார்.

இதையடுத்து கவுசல்யா சங்கர் சமூக நீதி அறக்கட்டளை ஆரம்பித்து செயல்பட்டு வந்தார்.

சங்கர் கொலை செய்யப்பட்டதையடுத்து குடிசை வீடாக இருந்த அவரது வீடு பசுமை வீடு கட்டும் திட்டத்தில் கட்டிக் கொடுக்கப்பட்டது. சங்கரின் தந்தைக்கு அரசு வேலை வழங்கப்பட்டது. கவுசல்யாவுக்கு குன்னூர் வெலிங்டன் கண்டோன்மென்டில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் கோவை வெள்ளலூரைச் சேர்ந்த பறை இசைக் கலைஞர் சக்தியை கவுசல்யா மறுமணம் செய்து கொண்டார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின.

இந்நிலையில் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்த கவுசல்யா இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து கவுசல்யாவை சஸ்பெண்ட் செய்து கன்டோண்மென்ட் நிர்வாகம் உத்தரவிட்டது. கண்டோன்மென்ட் முதன்மைச் செயல் அலுவலர் ஹரீஸ் வர்மா, கவுசல்யாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x