Published : 19 Feb 2019 10:31 AM
Last Updated : 19 Feb 2019 10:31 AM
மதுரை மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம் தற்போது விவசாயத்திலும் தீவிரம் காட்டி வருகிறது. சுமார் 60 ஏக்கரில் தென்னை, மா, நெல் உள்ளிட்ட பல்வகை பயிர்களை சாகுபடி செய்து, அதில் வருமானம் ஈட்டி கோயில் காரியங்களுக்கு செலவிட்டு வருகிறது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் ஆன்மிகம், கலை, கலாச் சார மையமாகத் திகழ்கிறது. ஆண்டுக்கு சுமார் 50 லட்சம் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.
இந்த கோயிலுக்குச் சொந்தமாக மதுரை மற்றும் மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் சில மாவட்டங்களில் உள்ள 67 ஊர்களில் 480-க்கும் மேற்பட்ட இடங்களிலும், 44 கிராமங்களில் பல நூறு ஏக்கர் நன்செய், புன்செய் நிலங்கள் உள்ளன. தற்போது புகழ்பெற்ற ஆன்மிகத் தலமாக இருந்தாலும், கடந்த காலத்தில் கோயில் கும்பாபிஷேகம், அன்றாட பூஜைகள், உற்சவம் நடத்த கோயில் நிர்வாகம் திண்டாடியுள்ளது. பொதுமக்களிடம் நன்கொடை வசூல் செய்து இக்கோயில் கும்பாபிஷேகம் நடந்த வரலாறும் உண்டு. மீனாட்சியம்மன் கோயிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறும். ஆண்டில் 240 நாட் கள் உற்சவ விழா நடக்கிறது. அதனால், பூக்கள் அலங்காரம், சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்யத் தேவையான பால், அன்னதானம் ஆகிய செலவுகளை ஈடுகட்ட மீனாட்சிம்மன் கோயில் நிர்வாகம், ஆன்மிகப் பணிகளுடன், கடந்த 5 ஆண்டுகளாக விவசாயப் பணியிலும் ஈடுபட்டுள்ளது.
மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகத்துக்குச் சொந்தமான பண்ணைத் தோட்டம், 120 ஏக் கரில் மதுரை அருகே கூடல் செங்குளம் கிராமத்தில் உள் ளது. இந்த கிராமம் ஆள் நட மாட்டமில்லாததால் வருவாய்த் துறையால் ஆளில்லா கிராமம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் உள்ள மீனாட்சி யம்மன் கோயில் பண்ணையில் கோயில் நிர்வாகம், சுமார் 65 ஏக்கரில் தென்னை, மா, கடம்ப மரம், புளிய மரம், நாவல், நெல்லி உள்ளிட்ட பல்வகை பழ மரங்களை சாகுபடி செய்துள்ளது.
இதுதவிர கால்நடைகளுக்குத் தேவையான தீவனப் புற்களும் வளர்க்கப்படுகின்றன. விவசாயத் தில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு தற்போது கோயிலில் அன்றாடம் நடக்கும் பூஜைகள், விழாக்களுக்கு செலவிடப்படு கிறது.
இதுகுறித்து மீனாட்சியம்மன் கோயில் இணை ஆணையர் நட ராஜன் கூறியதாவது: ‘‘தென்னை மரம் மட்டும் 25 ஏக்கரில் சாகு படி செய்துள்ளோம். இதில் 1,357 தென்னை மரங்கள், 50 ஆண்டுகள் பழமையானவை. அதில் ஏற்கெனவே தேங்காய் அறுவடை செய்கிறோம். தற்போது கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 8 ஏக்கரில் புதிதாக தென்னை மரக்கன்றுகளை நட்டோம். இந்த மரங்கள் மூலம் அடுத்த ஆண்டு முதல் மகசூல் கிடைக்க ஆரம்பிக்கும். முன்பு கோயில் அபிஷேகத்துக்கு தேவையான பாலை விலைக்கு வாங்கினோம்.
தற்போது உப்பளாச்சேரி, ஜெர்சி, காங்கேயம், தார்பார்க்கர் உள்ளிட்ட மாடுகளை நாங்களே வளர்ப் பதால், இந்த மாடுகள் கொடுக்கும் பால், கோயிலில் சுவாமி அபி ஷேகத்துக்கு பயன்படுகிறது. அதுபோக மீதமாகும் பாலை, கோயிலுக்கு வரும் பக்தர்களின் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்குகிறோம். முன்பு இந்த பசுமாடுகளுக்கும், கோயில் யானைகளுக்கும் தேவை யான தீவனப் புற்களை வெளியே விலைக்கு வாங்கினோம். தற் போது தோட்டத்திலேயே தீவ னப் புற்களை வளர்த்து பசுமாடு களுக்கும், யானை களுக்கும் கொடுக்கிறோம்,’’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT