Published : 28 Feb 2019 11:56 AM
Last Updated : 28 Feb 2019 11:56 AM
அதிமுக - பாஜக கூட்டணி மங்கலகரமான கூட்டணி. ஆனால் திமுக கூட்டணியோ மங்கிப்போன கூட்டணி. ஒவ்வாத கூட்டணி. உருப்படாத கூட்டணி என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு பேசியதாவது:
அதிமுக, பாஜக, பாமக கூட்டணி என்பது மங்கலகரமான கூட்டணி. ஆனால், திமுக கூட்டணி, மங்கிப்போன கூட்டணி. ஒவ்வாத கூட்டணி. ஒன்றுக்கும் ஆகாத கூட்டணி. உருப்படாத கூட்டணி.
தேசியப் பற்று கொண்ட மோடியை மீண்டும் பிரதமராக்குங்கள். இந்திய இறையாண்மையைக் கட்டிக்காக்கும் பாஜக, அதிமுக, பாமக கட்சிகளுக்கே வாக்களியுங்கள்.
மோடி கண்ணசைத்தால் போதும். அடுத்த ஒருமணி நேரத்தில் பாகிஸ்தானே இருக்காது. அதிமுக தொண்டர்கள் மட்டுமில்லாமல், தமிழகத்தில் ஒவ்வொரு பகுதி மக்களும், இளைஞர்களும் மோடி சொன்னால் கேட்பதற்குத் தயாராக இருக்கிறார்கள்.
இவ்வாறு ராஜேந்திர பாலாஜி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT