Published : 26 Jan 2019 10:11 AM
Last Updated : 26 Jan 2019 10:11 AM
அதிவேக ரயில்களை இயக்க தண்ட வாளத்தை மேம்படுத்தும் பணிகள் சவாலாக இருப்பதாக ரயில்வேயின் தென் மண்டல பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் தெரிவித்துள்ளார்.
இந்திய ரயில்வேயின் தென் மண்டல பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன். தெற்கு ரயில்வே, தென்மேற்கு மற்றும் சென்னை, பெங்களூரு, கொச்சி மெட்ரோ ரயில் நிறுவனங்களின் புதிய வழித்தடங்கள், ரயில் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் இவர் தலைமையிலான பாதுகாப்பு குழு முழுமையான ஆய்வு நடத்தி ஒப்புதல் வழங்கிய பிறகே அந்தத் தடங்களில் ரயில்களை இயக்க முடியும். சமீபத்தில் சென்னையில் வண்ணாரப்பேட்டை - டிஎம்எஸ் (10 கி.மீ) மெட்ரோ ரயில் தடத் தில் ஆய்வு நடத்திய இவர், ஒரு சில குறைபாடுகளை சரிசெய்ய மெட்ரோ ரயில் நிர்வா கத்துக்கு உத்தவிட்டுள்ளார். இந் நிலையில் ‘இந்து தமிழ்’ நாளித ழுக்கு கே.ஏ.மனோகரன் அளித்த சிறப்பு பேட்டி:
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சிறப்பு என்ன?
அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பயணிகளுக்கு தேவையான அளவுக்கு பாது காப்பு அம்சங்கள் மேம்படுத்தப் பட்டுள்ளன. சென்னையில் அதிக கி.மீ தூரத்துக்கு சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. இதற்கான கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்ட்ரல் அருகே ஆற்றுப் பகுதியின் கீழ் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறதா?
சென்னை - சென்ட்ரல் அருகே பூமிக்கு 15 மீட்டர் கீழே சுரங்கப்பாதை யில் மெட்ரோ ரயில் செல்ல ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு மெட்ரோ ரயில் செல்லவும், பயணி களுக்கு எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்கவும் போதிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ரயில்வேயில் அதிவேக ரயில்களை ஓட்டுவதில் இருக்கும் சிக்கல்கள் என்ன?
இந்தியன் ரயில்வேயில் புதிய வகை சொகுசு ரயில் பெட்டிகள், இன்ஜின்கள் வந்துகொண்டு இருக் கின்றன. இதற்கு ஏற்றார்போல் படிப்படியாக ரயில்களின் வேகம் 130 கி.மீ வரை அதிகரிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அதிவேக ரயில்களை ஓட்டுவதில் தற்போ துள்ள தண்டவாளங்கள், அதிக வளைவுகள் பெரிய சவாலாக இருக் கின்றன. எனவே, தண்டவாளங் களை மேம்படுத்துவதோடு, தேவை யற்ற நுழைவுகளை மூடி சுற்றுச் சுவர்கள் அமைக்க வேண்டியது அவசியமாகிறது.
சென்னை - கன்னியாகுமரி இரட்டை பாதை திட்டம் எப்போது நிறைவேறும்?
சென்னை - மதுரை வரையில் தற்போது இரட்டை பாதை பணி கள் நிறைவடைந்துள்ளன. அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் கன்னியா குமரி வரையில் இத்திட்டம் நிறைவ டையும் என எதிர்பார்க்கிறேன்.
ரயில் விபத்துகளை தடுக்க வாரியம் என்னென்ன நடவடிக் கைகளை எடுத்து வருகிறது?
ரயில்வே வாரியம் எடுத்து வரும் நடவடிக்கையால் ரயில் விபத்துகள் குறைந்து வருகின் றன. மேலும், ஆளில்லா நுழைவு கேட்கள் சுரங்கப்பாதைகளாகவும், சிறு பாலங்களாகவும் மாற்றப் பட்டுள்ளன. இதேபோல், பழைய தண்டவாளங்களை படிப்படியாக புதுப்பிக்கவும், தொடர்ந்து பரா மரிப்பு பணியை மேற்கொள்ளவும் வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அடிக்கடி ஏற்படும் ரயில் சிக்னல் கோளாறுக்கு தீர்வு என்ன?
சென்னை போன்ற முக்கிய நகரங்களில் அதிகாலை அல்லது மாலை நேரங்களில் இடைவெளி யின்றி ஒரே தடத்தில் அதிக அளவில் ரயில்களை இயக்குவதால் திடீரென சில நேரங்களில் சிக்னல் கோளாறு ஏற்படுகிறது. இதனால், ரயில்களின் சேவையில் சிறிது நேரம் பாதிப்பு ஏற்படுகிறது. கூடுதல் தண்டவாளங்களை அமைப்ப தோடு, தொடர்ந்து பராமரிப்பு பணி களை மேற்கொள்ள ரயில்வே மண்டலங்களுக்கு அறிவுறுத்து கிறோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT